புதிய பாட திட்டம் கடினம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய பாட திட்டம் கடினம்

Added : ஜூன் 15, 2019

பல்லடம்:புதிய பாட திட்டம் கடினமாக உள்ளதால், ஆசிரியர்கள், பாடம் நடத்த, தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த ஆண்டு, 1, 2 மற்றும் 6 - மற்றும் 10 ம் வகுப்புகளில், பாட திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. அவ்வகையில், நடப்பு ஆண்டு, 3 மற்றும் - 5ம் வகுப்பு வரை, பாட திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.புதிய பாட திட்டம், மிகவும் கடினமாக இருப்பதால், மாணவர்களுக்கு கற்பிப்பதில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:புதிய பாட திட்டங்கள், இன்றைய காலகட்டத்துக்கு தகுந்தபடி குழந்தைகளுக்கு ஏற்றதாக உள்ளது. ஆனால், பாடங்களில் உள்ள சில வாக்கியங்கள், மிகவும் கடினமானதாக உள்ளது. ஆசிரியர்களே அவற்றில் கவனம் செலுத்தி, புரிந்து கொண்டால் மட்டுமே, மாணவர்களுக்கு கற்பிக்க முடியும் நிலை உள்ளது.உதாரணமாக, ஐந்தாம் வகுப்பு பாட திட்டமானது, ஒன்பதாம் வகுப்புக்கு இணையாக உள்ளது. ஆரம்பகட்ட கல்வி கற்கும் மாணவர்களால், கூடுதலாக சிந்திக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும், அதனால், ஆசிரியர்கள் மட்டுமன்றி, மாணவர்களும் பாடங்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.படிப்பறிவு குறைந்த மாணவர்களை, ஆசிரியர்கள் மிகுந்த அக்கறை காட்டி, கற்பித்தால் மட்டுமே, மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய முடியும். புதிய பாட திட்டங்கள், தொழில்நுட்பம் நிறைந்த இன்றைய காலகட்டத்துக்கு அவசியம் என்றாலும், அவற்றை, கொண்டு சேர்க்க முடியுமா என்பது, ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களின் கையில் உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X