சம்பவம் செய்தி

தமிழ்நாடு

4 வாகனம் மீது மோதிய அசுர வேக கார்: டிரைவருக்கு, பொதுமக்கள் 'செம மாத்து'

Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 4 வாகனம் மீது மோதிய அசுர வேக கார்: டிரைவருக்கு, பொதுமக்கள் 'செம மாத்து'

பல்லடம்:பல்லடம் அருகே, அசுர வேக கார், 4 வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதால், கார் டிரைவரை பொதுமக்கள் அடித்து துவைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.திருப்பூர் - கோவை செல்லும் சொகுசு கார் ஒன்று, நேற்று காலை, பல்லடம் நோக்கி வந்தது. பல்லடம் -திருப்பூர் ரோடு மகாலட்சுமி நகர் பகுதியில், பள்ளி வேன் ஒன்று, சிக்னலில், வலதுபுறமாக திரும்பியது.
அதேநேரம், அசுர வேகத்தில் வந்த ஒரு கார், பள்ளி வேன் மீது மோதாமல் இருக்க, கட்டுப்பாட்டை இழந்து வலது புறமாக திரும்பி, எதிரே வந்த பைக், மற்றும், நின்றிருந்த ஆம்னி கார் மீது மோதி, ரோட்டோர பேக்கரிக்குள் புகுந்தது.இந்த விபத்தில், பைக்கில் சென்ற மகாலட்சுமி நகரை சேர்ந்த ரத்தினசாமி மகன் சந்திரமவுலீஸ்வரன், 25, மற்றும் முருகவேல் மகன் மதிவாணன், 23 ஆகிய இருவரும் படுகாயமடைந்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காரை அசுர வேகத்தில் ஓட்டி வந்த டிரைவர் திருப்பூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் சூரியபிரகாஷ், 25 என்பவருக்கு, பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.'பெரும் விபத்து தவிர்ப்பு'அசுர வேக கார், விபத்து ஏற்படுத்திய நேரம், பள்ளி குழந்தைகள், மற்றும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் காலை நேரமாகும். கார் விபத்து ஏற்படுத்தும் முன், பள்ளி குழந்தைகளுடன் வேன், வலது புறமாக திரும்பியது. அதே சமயம், பஸ் ஸ்டாப்பிலும் அதிகமானோர் இல்லை; ரோட்டோர பேக்கரியில், ஒரு சிலர் மட்டுமே டீ குடித்து வந்தனர்.
அதன் காரணமாக, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேக்கரிக்குள் நுழைந்ததில், கடையிலிருந்த, 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் உடைந்து நாசமாயின.அடிக்கடி விபத்துமகாலட்சுமி நகர் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், இதேபோல், கார் மோதி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அசுர வேகத்தில் வரும் வாகனங்கள், இடையில் முக்கிய சந்திப்பு இருப்பதை கவனிப்பதில்லை. அதே சமயம், மகாலட்சுமி நகருக்குள், கவனக்குறைவாக திரும்பும் வாகனங்களால், விபத்து ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-201904:43:24 IST Report Abuse
Mani . V இதென்னய்யா அராஜகமா இருக்கு? பணக்கார வீட்டு பிள்ளைங்க இப்படித்தான் அசுர வேகத்தில் வருவார்கள். அவர்கள் சாலையின் ஓரத்தில் நிற்கும், படுத்திருக்கும் ஆட்கள் மீது காரை ஏற்றி கொலை செய்வார்கள். இதெல்லாம் கண்டுக்கக் கூடாது. ஆமா சொல்லிப்புட்டோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X