பொது செய்தி

தமிழ்நாடு

'வடமாநில தொழிலாளர் விவரம் பதிவு செய்யணும்!'

Added : ஜூன் 15, 2019
Advertisement

திருப்பூர்:ஆடை உற்பத்தி நிறுவனங்கள், வடமாநில தொழிலாளர் விவரங்களை ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவு செய்யவேண்டும் என, மாநகர போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.தமிழகம் மட்டுமின்றி, ஒடிசா, ஜார்கண்ட், மணிப்பூர், ராஜஸ்தான் என, பல்வேறு வெளிமாநிலத்தவர்களும், இடம்பெயர்ந்து வந்து, திருப்பூரில் பணிபுரிகின்றனர். வங்கதேசம், நைஜீரியா நாட்டினரும் அதிகளவில், பனியன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர் பற்றாக்குறை நீடிப்பதால், பெரும்பாலான நிறுவனங்கள், புலம் பெயர்ந்துவரும் தொழிலாளர்களின் பின்புலம் எதையும் ஆராயாமலேயே, பணியில் சேர்த்துவிடுகின்றன. இதனால், தொழிலாளர் போர்வையில், கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள், சமூக விரோதிகள், திருப்பூரை பதுங்கு குழியாக பயன்படுத்துகின்றனர்.ஒழுங்குபடுத்துதல் இல்லாததால், குற்றவாளிகளை கண்டறிவதும், போலீசாருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆயத்த ஆடை வர்த்தக வளர்ச்சி முக்கியம். அதேநேரம், நகர பாதுகாப்பு மிக முக்கியமாகிறது.குற்றச்செயல்கள் அதிகரித்தால், நகர அமைதி சீர்குலைந்துவிடும்; குற்றம் நிறைந்த நகருக்கு வந்து செல்ல வெளிநாட்டு வர்த்தகர்கள் அஞ்சுவர்; ஆடை தயாரிப்பு ஆர்டர் தர மறுத்துவிடுவர். அதனால், வர்த்தகத்தையும் இழக்க நேரிடும்.நகர பாதுகாப்புடன் கூடிய வர்த்தக வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, திருப்பூர் மாநகர போலீசார் புதிய திட்டம் வகுத்துள்ளனர். வடமாநில தொழிலாளர் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்காக, இணைய வழி மென்பொருள் உருவாக்கப்பட்டுவருகிறது. நிறுவனங்களிடமிருந்து தொழிலாளர் விவரங்களை பெற்று, குற்றவாளிகளை அடையாளம் கண்டு, எளிதாக பிடிக்க உள்ளனர்.போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பின்னலாடை துறையினர் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. சைமா சங்க பொதுச்செயலாளர் பொன்னுசாமி, ஏற்றுமதியாளர் சங்க நிர்வாக செயல் அதிகாரி சக்திவேல் மற்றும் பின்னலாடை நிறுவன மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா, தொழில்துறையினருடன் கலந்துரையாடினார்.
ஆடை உற்பத்தி நிறுவனங்கள், வேலை தேடி வருவோரை பணி அமர்த்தும்முன், அவர்களிடம் விசாரிக்கவேண்டும். சந்தேகத்துக்கு இடமானவர்களை நிறுவனத்தில் சேர்க்க கூடாது; போலீசாரிடம் ஒப்படைத்துவிடவேண்டும்.தொழிலாளர் விவரங்களை சேகரிப்பதற்கு, ஆன்லைன் மென்பொருள் தயாராகி வருகிறது.
இதன் லிங்க், தொழில் அமைப்பினருக்கு அனுப்பி வைக்கப்படும்; அவர்கள், தங்களது உறுப்பினர் நிறுவனங்களுக்கு லிங்க்கை அனுப்பி வைக்க வேண்டும்.ஆடை உற்பத்தி துறையினர், வடமாநில தொழிலாளர்களின் ஆதார் உட்பட அனைத்து விவரங்களையும் சேகரிக்க வேண்டும். போலீஸ் தரப்பில் வழங்கப்படும் ஆன்லைன் விண்ணப்பத்தில், விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இந்த விவரங்கள் அடிப்படையில், தொழிலாளி வழங்கிய ஆதாரின் உண்மைத்தன்மை, வேறு மாநிலங்களில் ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா; அவர் மீது வழக்குகள் உள்ளனவா என்கிற விவரங்களை போலீஸார் கண்டறிவர். இதன்மூலம், குற்றவாளிகளை எளிதில் கண்டறிய முடியும்.நகரின் பாதுகாப்புக்கு, தொழில் துறையினர் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். தொழிலாளர் விவரங்களை பதிவு செய்து, போலீசுக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என, தொழில் அமைப்பினர், துணை கமிஷனரிடம் உறுதி அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X