பொது செய்தி

தமிழ்நாடு

பேஷன் ஆடை தயாரித்து இளைஞர்கள் அசத்தல்!

Added : ஜூன் 15, 2019
Advertisement
 பேஷன் ஆடை தயாரித்து இளைஞர்கள் அசத்தல்!

திருப்பூர்:தையல் மெஷின் தின விழாவில், புதிய டிசைன்களில் ஆடை உருவாக்கி கிராமப்புற மாணவர்கள் அசத்தினர்.ஆண்டுதோறும் ஜூன் 13ம் தேதி, தேசிய தையல் மெஷின் தினமாக கொண்டாடப்படுகிறது. திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்--டீ கல்லுாரியில், தையல் தினம், நேற்று கொண்டாடப்பட்டது. கல்லுாரி நிர்வாக ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார். திறன் மேம்பாட்டு துறைத் தலைவர் சிவஞானம் வரவேற்றார்.மத்திய அரசின் தீன்தயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில், பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த 254 பேர், நிப்ட்--டீ கல்லுாரியில் தங்கி, ஆடை உற்பத்தி கல்வி கற்கின்றனர். தையல் மெஷின் தினத்தில், இம்மாணவர்களுக்கு ஆடை தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டது. மாணவர்கள் 150 பேர் பங்கேற்று, புதுவகை டிசைன்களில், ஆண்கள், பெண்களுக்கான ஆடை ரகங்களை உருவாக்கினர்.காகிதம், பிளாஸ்டிக் பாட்டில், நுால், கழிவு துணி உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி, கலைநயம் மிக்க பொருட்களை தயாரித்து அசத்தியுள்ளனர். கல்லுாரியில் நேற்று நடந்த விழாவில், மாணவர்கள், தாங்கள் உருவாக் கிய ஆடைகளை அணிந்துவந்து, பேஷன் ஷோ நடத்தினர்.சிறந்த ஆடை உருவாக்கிய நாமக்கல் மாவட் டத்தை சேர்ந்த முகமது ரபீக், உசிலம்பட்டியைச்சேர்ந்த லலிதாராணி, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா ஆகியோருக்கு, பரிசு மற்றும் சான்று வழங்கப்பட்டது; அடல் இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி, பி.எஸ்., அப்பேரல்ஸ் நிறுவன துணை தலைவர் அறிவொளி பரிசு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X