பொது செய்தி

தமிழ்நாடு

தலைமை ஆசிரியர்களுக்கு 'லேப்டாப்'

Added : ஜூன் 15, 2019
Advertisement
 தலைமை ஆசிரியர்களுக்கு 'லேப்டாப்'

திருப்பூர்:அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.கல்வித்தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.
முதல் கட்டமாக தனியார் பள்ளிக்கு இணையாக, அரசு பள்ளிகளையும் தரம் உயர்த்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமின்றி சரியான நேரத்திற்கு வருவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையும் இம்மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.இதன்மூலம் ஒவ்வொரு பள்ளி ஆசிரியர்களின் வருகையை பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்திலிருந்தே கண்காணிக்க முடியும். இருப்பினும் தொலைதுார பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சரியான தொலைத்தொடர்பு வசதி இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் ஆசிரியர்கள் தரப்பில் முன்வைக்கப் பட்டது.சில பள்ளிகளில் வருகையை பதிவு செய்ய கம்ப்யூட்டர் வசதி இல்லை என்ற புகாரும் உண்டு. இதனை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மூலம் லேப்டாப் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பயோமெட்ரிக் வருகை பதிவிற்கு கம்ப்யூட்டர் அவசியம். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே லேப்டாப் வழங்கப்பட்டு விட்டது.உயர்நிலைப்பள்ளிகளுக்கும் பயோமெட்ரிக் பதிவு அமலில் உள்ளதால் இப்பள்ளிகளுக்கென பிரத்யேக லேப்டாப் விரைவில் வழங்கப்படும். இதன்மூலம் ஆசிரியர், மாணவர் வருகை செயலிகள் பதிவு செய்து பயன்படுத்தலாம்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X