பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் வடக்கில் ஜமாபந்தி நிறைவு: 102 பயனாளிகளுக்கு நல உதவி

Added : ஜூன் 15, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூர் வடக்கு தாலுகாவில், நேற்றுடன் ஜமாபந்தி நிறைவடைந்தது; திருநங்கையருக்கு, உதவித்தொகை பெறும் உத்திரவு வழங்கப்பட்டது.திருப்பூர் வடக்கு பிர்காவுக்கு, 13ம் தேதியும், வேலம்பாளையம் பிர்காவுக்கு நேற்றும் ஜமாபந்தி நடந்தது. உதவிகமிஷனர் (கலால்) சிவக்குமார் தலைமை வகித்தார்.
வருவாய்த்துறை பதிவேடுகள் சரிபார்க்கப்பட்டு, நில அளவை உபகரணங்களை பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.தாசில்தார் ஜெயக்குமார், தனி தாசில்தார்கள் சுந்தரம், தமிழ்செல்வம் ஆகியோர், மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். துணை தாசில்தார் கண்ணாமணி, தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெகஜோதி, நிலவருவாய் ஆய்வாளர்கள் பரமேஷ், சரவணன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.முதல்நாளில், 90 மனுக்கள்; நேற்று, 164 மனுக்கள் என, 254 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியான, 102 மனுக்கள் உடனடியாக ஏற்கப்பட்டு, நல உதவி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மீதியுள்ள, 152 மனுக்கள் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில், ஜமாபந்தி அலுவலர் சக்திவேல், பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X