சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி மாணவர் பலி

Added : ஜூன் 15, 2019
Advertisement

பல்லடம்:பல்லடம் அருகே, பைக் கழுவும்போது, மின்சாரம் தாக்கிய விபத்தில், கல்லுாரி மாணவர் ஒருவர் பலியானார்.பல்லடத்தை அடுத்த கணபதிபாளையத்தை சேர்ந்த பரமசிவன் மகன் முத்துக்குமார், 20. கொடுவாயில் உள்ள தனியார் இன்ஜி., கல்லுாரியில், பி.இ., முதலாம் ஆண்டு படிக்கிறார். இவர் அண்ணன் வெங்கடாசலபதி, 23, கணபதிபாளையத்தில், கார் ஒர்க்ஷாப் வைத்துள்ளார்.நேற்று முன்தினம் மாலை, அண்ணனின் ஒர்க் ஷாப் சென்ற முத்துக்குமார், தனது பைக்கை வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக, மோட்டாரை ஆன் செய்தார். அப்போது, திடீரென ஏற்பட்ட மின்சாரம் தாக்கி, முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X