சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை, தற்கொலை, பலி

Added : ஜூன் 15, 2019
Advertisement

வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

பூந்தமல்லி: பூந்தமல்லி, ராஜா அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர், ரவிகுமார் மகன் பிரதீன், 30. ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில், வேலை செய்து வந்தார். 12ம் தேதி, இவரது பெற்றோர், போளூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை திரும்பி வந்தபோது, கதவு, உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால், கதவை உடைத்தனர். அப்போது, பிரதீன் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

ரயிலில் இருந்து விழுந்த பெண் பலி
தாம்பரம்: மதுரையசை் சேர்ந்தவர், சுந்தரகண்ணன். இவரது, மனைவி கலாவதி, 56. நேற்று மதியம், தன் கணவர் மற்றும் உறவினருடன், மதுரை செல்ல, வைகை விரைவு ரயிலில் ஏறுவதற்காக, தாம்பரம் ரயில் நிலையம் வந்தார்.ரயில் வந்ததும் ஏற முயன்ற கலாவதி, தவறி கீழே விழுந்தார். படுகாயமடைந்தவர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், பலியானார். தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
மனைவி கண்டிப்பால் கணவன் தற்கொலை

ஆலந்துார்: பரங்கிமலை, நசரத்புரத்தைச் சேர்ந்தவர், மதன்குமார், 35; கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் கொண்டவர். இவரது மனைவி காமாட்சி, 31. மதன்குமார், சம்பாதிக்கும் பணத்தை, மதுவிற்கு செலவழித்து, போதையுடன், வீடு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, காமாட்சி கண்டித்துள்ளளார். மனமுடைந்த மதன்குமார், துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மவுன்ட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X