பொது செய்தி

தமிழ்நாடு

செங்கல்பட்டு ரயில்கள் பாதி வழியில் ரத்து

Added : ஜூன் 15, 2019
Advertisement

சென்னை:ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள், பாதி வழியில், ரத்து செய்யப்பட்டுள்ளன.

*சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு, காலை, 10:15 மணி முதல், இரவு, 8:52 மணி வரை இயக்கப்படும், 19 மின்சார ரயில்கள், நாளை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில்கள் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன

*செங்கல்பட்டில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, காலை, 11:50 மணியில் இருந்து, இரவு, 11:30 மணி வரை இயக்கப்படும், 18 ரயில்களும், திருமால்பூரில் இருந்து, சென்னை கடற்கரை நிலையத்துக்கு காலை, 11:30 இயக்கப்படும் ரயிலும், செங்கல்பட்டு - தாம்பரம் இடையே, நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆறு சிறப்பு ரயில்கள்

செங்கல்பட்டில் இருந்து, திருமால்பூருக்கு மதியம், 2:50 மணி மற்றும் 4:50 மணிக்கும், செங்கல்பட்டில் இருந்து, காஞ்சிபுரத்துக்கு, இரவு, 8:45 மணிக்கும், திருமால்பூரில் இருந்து, செங்கல்பட்டுக்கு காலை, 10:25 மணி, மாலை, 5:10 மணி மற்றும் இரவு, 9:00 மணிக்கும், நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


38 ரயில்கள் ரத்து

ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - வேளச்சேரி இடையே, 38 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, வேளச்சேரிக்கு, நாளை, காலை, 8:00 மணியில் இருந்து, மதியம், 1:40 மணி வரை இயக்கப்படும், 19 ரயில்களும், வேளச்சேரியில் இருந்த, கடற்கரை நிலையத்துக்கு காலை, 8:10 மணியில் இருந்து, மதியம், 2:10 மணிக்கு இயக்கப்படும், 19 ரயில்களும் என, மொத்தம், 38 ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடற்கரை நிலையத்தில் இருந்து, வேளச்சேரிக்கு மதியம், 2:00 மணியில் இருந்தும், வேளச்சேரியில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு மதியம், 2:10 மணியில் இருந்தும், வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பல்லவன் நேரம் மாற்றம்

சென்னை எழும்பூரில் இருந்து, திருச்சிக்கு மாலை, 3:45 மணிக்கு இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ், நாளை நேரம் மாற்றம் செய்யப்பட்டு, மாலை, 4:45 மணிக்கு இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.38 ரயில்கள் ரத்துரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - வேளச்சேரி இடையே, 38 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, வேளச்சேரிக்கு, நாளை, காலை, 8:00 மணியில் இருந்து, மதியம், 1:40 மணி வரை இயக்கப்படும், 19 ரயில்களும், வேளச்சேரியில் இருந்த, கடற்கரை நிலையத்துக்கு காலை, 8:10 மணியில் இருந்து, மதியம், 2:10 மணிக்கு இயக்கப்படும், 19 ரயில்களும் என, மொத்தம், 38 ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடற்கரை நிலையத்தில் இருந்து, வேளச்சேரிக்கு மதியம், 2:00 மணியில் இருந்தும், வேளச்சேரியில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு மதியம், 2:10 மணியில் இருந்தும், வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X