பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் மரம் வெட்டியதால் பரபரப்பு : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Added : ஜூன் 15, 2019
Advertisement
 கோவில் மரம் வெட்டியதால் பரபரப்பு : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே கொழுமம் நடராஜர் கோவில் பகுதியில் மரம் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.மடத்துக்குளம் அருகே கொழுமத்தில், ஆயிரம் ஆண்டு பழமையான நடராஜர் கோவில் உள்ளது. இதன் சுற்றுச்சுவரை சுற்றி கோவிலுக்கு சொந்தமான தோப்பு மற்றும் பல வகை மரங்கள் உள்ளன.
நேற்றுமுன்தினம், இங்குள்ள மரம் வெட்டப்படுவதாக தகவல் பரவியது. உடனடியாக இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் சம்பந்தபட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர்.அங்கு, வேப்பமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதோடு, அதை துண்டுகளாக்கி லோடு ஏற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். கூட்டம் சேர்ந்ததால் அதிர்ச்சியடைந்து மரம் வெட்டுவதை நிறுத்தினர்.
இதுகுறித்து, கொழுமம் இந்து முன்னணியினர் கூறுகையில், 'அனுமதியின்றி மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்தனர். மக்கள் திரண்டதால் தடுக்கப்பட்டது இதற்கு முன் பலமரங்கள் கடத்தப்பட்டுள்ளன. இது குறித்து உரிய விசாரணையும், நடவடிக்கையும் எடுக்க வேண்டும்' என்றனர்.இது குறித்து கொழுமம் நடராஜர் கோவில் செயல்அலுவலர் பவானி கூறுகையில், ''மழைக்கு மரம் சாய்ந்து விட்டதால், கோவில் நிலத்தை குத்தகைக்கு பயன்படுத்துபவர்கள், வெட்டி அப்புறப்படுத்தினர்,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X