சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.5 லட்சம் நவரத்தின கற்கள் திருடியவன் கைது

Added : ஜூன் 15, 2019
Advertisement

மாம்பலம்:நகை வியாபாரியிடம், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, நவரத்தின கற்களை திருட முயன்றவனை, போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், முல்லை நகரைச் சேர்ந்தவர், செல்வம், 45. இவர், 20 ஆண்டுகளாக, நவரத்தின கற்கள் வாங்கி, விற்பனை செய்யும், வியாபாரம் செய்து வருகிறார்.மேலும், அகில இந்திய நவரத்தின கற்கள் வியாபார சங்கத்தில், உறுப்பினராக உள்ளார். கடந்த, 20 நாட்களாக, மதுரையைச் சேர்ந்த பாஸ்கர், 31, என்பவன், செல்வத்தை தொடர்பு கொண்டு, நவரத்தின கற்கள் வியாபாரம் தொடர்பாக பேசி வந்தான்.
இந்நிலையில், செல்வம் மற்றும் அவரது நண்பர் ரவிகுமார், 26, ஆகியோர், தி.நகர், மகாலட்சுமி தெருவில் உள்ள தனியார் விடுதியில், நேற்று முன்தினம் தங்கினர்.இந்நிலையில், மூன்று நண்பர்களுடன் விடுதிக்கு வந்த பாஸ்கர், நவரத்தின கற்களை வாங்குவதாக தெரிவித்தான். இதையடுத்து, செல்வம், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, மூன்று கற்களை, பாஸ்கர் மற்றும் நண்பர்களுக்கு பார்வையிட அளித்தார்.
அப்போது, பாஸ்கரின் நண்பர்கள், செல்வம் மற்றும் ரவிகுமார் முகத்தில், மிளகாய் பொடி துாவி, கற்களுடன் தப்பிக்க முயன்றனர். செல்வம் கூச்சலிடவே, பாஸ்கரை விடுதியில் இருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். அவனது நண்பர்கள் மூவரும் தப்பினர்.பாஸ்கரை கைது செய்த, மாம்பலம் போலீசார், தப்பிய மூவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X