சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணுக்கு வெட்டு சபாநாயகர் ஓட்டுனர் கைது

Added : ஜூன் 15, 2019
Advertisement

குரோம்பேட்டை:பல்லாவரத்தில், சபாநாயகரின் கார் ஓட்டுனர், இளம்பெண்ணை கத்தியால் வெட்டிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்துார், அமரேசன் நகர், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மோகன்; தனியார் வங்கி மேலாளர்.நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக, மோட்டார் போட்டுள்ளார். அப்போது, அதே குடியிருப்பில் வசிக்கும், தமிழக சபாநாயகர் தனபாலின், அரசு கார் ஓட்டுனரான, ஆதிமூல ராமகிருஷ்ணன், 40, என்பவன், குடிநீர் தொட்டியில் தண்ணீர் இல்லை; எதற்காக மோட்டார் போடுகிறாய் என கேட்டுள்ளான்.

அப்போது, இருவருக்கும் இடையே, வாய் தகராறுஏற்பட்டது. இதில், மோகனை, ஆதிமூல ராமகிருஷ்ணன் எட்டி உதைத்துள்ளான்.இதை மோகனின் மனைவி சுபாஷினி, 28, என்பவர், தட்டி கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த ஆதிமூல ராமகிருஷ்ணன், சுபாஷினியை தாக்கி, கத்தியால் வாய்தாடையில் வெட்டினான்.

இதில், காயமடைந்த சுபாஷினி, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவருக்கு, ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளன.சங்கர் நகர் காவல் நிலையத்தில், சுபாஷினி அளித்த புகாரையடுத்து, போலீசார், ஆதிமூல ராமகிருஷ்ணனை கைது செய்து, பின் ஜாமினில் விடுவித்தனர்.இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X