பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்களில் முதியோருக்கு வழிகாட்டி அட்டைகள்

Added : ஜூன் 15, 2019
Advertisement
 ரயில்களில் முதியோருக்கு வழிகாட்டி அட்டைகள்

சென்னை:''ரயில் பயணத்தில், முதியோருக்கு வழிகாட்டும் அட்டைகள் விரைவில் வழங்கப்படும்,'' என, ரயில்வே, டி.ஐ.ஜி., பாலகிருஷ்ணன் பேசினார்.

'ஹெல்ப் ஏஜ் இந்தியா' அமைப்பின் சார்பில், 'உலக முதியோர் கொடுமைகளுக்கான விழிப்புணர்வு நாள்' நிகழ்ச்சி, எழும்பூரில் நேற்று நடந்தது.துன்புறுத்தல்இதில், கடந்தாண்டின் முதியோர் தொடர்பான ஆய்வறிக்கையை, ரயில்வே, டி.ஐ.ஜி., பாலகிருஷ்ணன், தமிழ்நாடு சட்ட ஆணைய துணைச்செயலர், சுந்தரமூர்த்தி ஆகியோர் வெளியிட்டனர்.

டி.ஐ.ஜி., பாலகிருஷ்ணன் பேசியதாவது:வீட்டில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்படுவது, சமூகத்தால் புறக்கணிக்கப்படுவது, அரசால் கைவிடப்படுவது என, முதியோர் பல நிலைகளில், துன்புறுத்தலை அனுபவிக்கின்றனர்.வீட்டில் உள்ள பிரச்னைகளை காரணம் காட்டி, பெரும்பாலான முதியவர்களை, ரயில் நிலையங்களில், இறக்கிவிட்டு சென்று விடுகின்றனர்.

தீர்வு

இந்த அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டோரில் பலரை, ரயில்வே போலீசார் மீட்டு, தனியார் இல்லங்களில் தங்க வைத்துள்ளனர்.முதியோர் உதவிக்கு யாரை தொடர்பு கொள்வது என, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதற்கு, உடனடி தீர்வு கிடைக்கும் வகையில், 1512 என்ற தொலைபேசி எண்ணை கட்டமைத்துள்ளோம். இது போன்ற பல விபரங்கள் அடங்கிய, 'வழிகாட்டி அட்டைகள்' முதியோருக்கு வழங்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

கற்பித்தலுக்கு அவசியம்

தமிழ்நாடு சட்ட ஆணைய துணைச்செயலர், சுந்தரமூர்த்தி பேசியதாவது:நாட்டில், முதியோர் தனித்து விடப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு, கூட்டுக் குடும்பங்கள் உடைவதே காரணம். நான் சிறுவனாக இருந்த போது, எங்கள் குடும்பம் பெரியதாக இருந்தது. அப்போது, ஒரே வருமானம் தரும் தொழிலாக, விவசாயம் இருந்தது. அதற்கு, அதிக ஆட்கள் தேவைப்பட்டதால், அதிக குழந்தைகளை பெற்றுக் கொண்டனர்.

சகோதர - சகோதரியரே, அனைவரின் பிள்ளைகளையும் ஒற்றுமையாக வளர்த்தனர்.வயது முதிர்ந்தோர், தங்களுக்குள் பேசி, நேரத்தை போக்கியதோடு, மனதையும் இலகுவாக வைத்துக் கொண்டனர்.தற்போது, அந்த நிலை இல்லை. தாத்தா, பாட்டி, பேரப் பிள்ளைகளுக்கு இடையிலான பிணைப்பு உடைகிறது. அதை சரிசெய்ய, இருவருக்குமான ஒருங்கிணைந்த கற்பித்தலுக்கு அவசியம் ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், வழக்கறிஞர் ஆதிலட்சுமி, தமிழக ஹெல்ப் ஏஜ் இந்தியா நிறுவன மாநில தலைவர், சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X