அமராவதி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து நீர்வரத்து அதிகரிப்பு!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து நீர்வரத்து அதிகரிப்பு!

Added : ஜூன் 15, 2019
  அமராவதி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து நீர்வரத்து அதிகரிப்பு!

உடுமலை:உடுமலை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, நீர்மட்டம், 30 அடியை எட்டியுள்ளது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மூலம், திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாக, மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள, மூணாறு, தலையாறு, மறையூர், பெரியவாரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் பாம்பாறும், கிழக்கு பகுதியிலிருந்து தேனாறும், மேற்கு பகுதி மலைகளில் பெய்யும் மழை நீர், சின்னாறு வழியாகவும் அணைக்குள் நீர் வருகிறது.
கடந்த ஆண்டு பருவ மழைகள் ஏமாற்றியதால், அணை நீர்மட்டம் சரிந்து, கடந்த நான்கு மாதமாக நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இந்தாண்டு, குளிர்கால மழை மற்றும் கோடை மழை ஏமாற்றியதால், அணை நீர் மட்டம், மொத்தமுள்ள, 90 அடியில், 25 அடியாக, கடந்த ஐந்து மாதமாக காணப்பட்டது.இந்நிலையில், மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில், தென் மேற்கு பருவ மழை துவங்கி, தீவிரமடைந்து, அணைக்கு நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. வறண்டு காணப்பட்ட பாம்பாறு, தேனாறு, சின்னாறுகளில் நீர்வரத்து துவங்கியுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, அணை நீர் மட்டம், 30.48 அடியாகவும், நீர்இருப்பு, 413 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 152 கன அடி நீர் வரத்து இருந்தது.படிப்படியாக அதிகரிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,' அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதால், அணைக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அடுத்த வாரத்தில், பருவ மழை தீவிரமடையும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிகளவு நீர் வரத்து வர வாய்ப்புள்ளது,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X