பொது செய்தி

தமிழ்நாடு

மாயமான குட்டையை மீட்க வலியுறுத்தல்

Added : ஜூன் 15, 2019
Advertisement

உடுமலை:உடுமலை கண்ணமநாயக்கனுாரிலுள்ள குட்டை, நீர் வழித்தடத்தை மீட்கவும், இரு வி.ஏ.ஓ.,க்களுக்கு ஒரே, 'யூசர் ஐ.டி.,' உள்ளதால் சிக்கல் ஏற்படுவதாகவும், ஜமாபந்தியில் மனு அளித்தனர்.உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடந்து வரும் ஜமாபந்தியில், கண்ணமநாயக்கனுார் கிராம மக்கள் கொடுத்த மனுக்கள் :கண்ணமநாயக்கனுார் கிராமம், 1,2 என இரண்டாக பிரிக்கப்பட்டு, இரு வி.ஏ.ஓ.,க்கள், தனித்தனி அலுவலகங்களில் உள்ளனர்.
பல்வேறு வகையான சான்று பெற, இணைய தளம் மூலம் பொதுமக்கள் விண்ணப்பிக்கின்றனர். ஆனால், இருவரில் ஒருவருக்கு மட்டுமே, வருவாய்த்துறையின் 'யூசர்-ஐ.டி.,' மற்றும் 'பாஸ்வேர்டு' கொடுக்கப்பட்டுள்ளது.இதனால், சான்றிதழ் பெற அலைக்கழிக்கப்படும் நிலையும், இரு வி.ஏ.ஓ.,க்களை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, இருவருக்கும் தனித்தனியாக, இணைய தள வசதி அளித்து, உடனடியாக சான்றிதழ் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கண்ணமநாயக்கனுார் கிராமத்தில், க.ச.,எண் 812/2ல், குட்டை மற்றும் நீர்வழி புறம்போக்கு உள்ளது. இதனை ஆக்கிரமித்துள்ளதால், நீர் வழித்தடங்கள் மாயமாகியுள்ளதோடு, ரோட்டை ஆக்கிரமித்துள்ளதால், விபத்துக்களும் அதிகரித்து வருகிறது.இரு ஆண்டாக, கலெக்டர், விவசாயிகள் குறை தீர் கூட்டங்களில் மனு அளித்தும் பயனில்லை.
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவு இருந்தும் கண்டு கொள்வில்லை. உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, குட்டை, ஓடையை மீட்டு, மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், கண்ணமநாயக்கனுார் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் , தனிநபர்கள் பெயரில் பட்டா உள்ள நிலையில், பதிவுத்துறையில் தவறுதலாக வகுப்பு வாரிய நிலம் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால், பெரும் சிக்கல் ஏற்படுகிறது. பல்வேறு போராட்டம் நடத்தியும் பயனில்லை; உடனடி தீர்வு காண வேண்டும், என மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X