பொது செய்தி

தமிழ்நாடு

மேம்படுத்தப்பட்ட, 'டிஜிகாப்' செயலி: அறிமுகம் செய்தார் போலீஸ் கமிஷனர்

Added : ஜூன் 15, 2019
Advertisement
 மேம்படுத்தப்பட்ட, 'டிஜிகாப்' செயலி: அறிமுகம் செய்தார் போலீஸ் கமிஷனர்

சென்னை:பொதுமக்கள், எந்தவித அலைச்சலுமின்றி எளிதில் புகார் அளிக்க, 'டிஜிகாப்' எனும், மொபைல் செயலியை, சென்னை மாநகரபோலீசார், அறிமுகம் செய்துள்ளனர்.

சென்னை மாநகர போலீசார், அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய, மொபைல் செயலிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். பிப்., 6ல், 'டிஜிகாப்' எனும், மொபைல் செயலியை, அறிமுகம் செய்தனர்.இதன் வாயிலாக, எந்தவித அலைச்சலுமின்றி பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

புகார்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்தனரா; எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கை பதிந்து விட்டனரா என்பது உள்ளிட்ட, தற்போதைய நிலவரம் குறித்தும் அறியலாம்.பொது மக்கள், ஸ்மார்ட் மற்றும் ஆப்பிள் போன்களில், டிஜிகாப் என, 'டைப்' செய்து, இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம். தற்போது, இந்த செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி, சென்னை, வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று நடந்தது. செயலியை, கமிஷனர்,ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்தார்.உடன், தலைமையிடத்து கூடுதல், டி.ஜி.பி., சீமா அகர்வால், கூடுதல் கமிஷனர்கள், மகேஷ்குமார் அகர்வால், தினகரன், அருண் உள்ளிட்ட, உயர் போலீஸ் அதிகாரிகளும் இருந்தனர்.


102 போலீசார் மீது வழக்கு

போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது:

'டிஜிகாப்' மொபைல் செயலியை, இதுவரை, 72,150 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 33,839 பேர், தங்கள் மொபைல் போனின், ஐ.எம்.இ.ஐ., எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்துள்ளனர்.மொபைல் போன்கள் திருடு போனது தொடர்பாக, 8,318 பேர் புகார் அளித்து உள்ளனர்; 1,227 மொபைல் போன்களும், 151 இரு சக்கர வாகனங்களும் மீட்கப்பட்டு உள்ளன. திருட்டு மொபைல் போன்களா என்பதை அறிய, 4,086 பேர், ஐ.எம்.இ.ஐ., எண்ணை, செயலியில், உள்ளீடு செய்து பார்த்துள்ளனர்.

தமிழகத்தின் எந்த இடத்தில், மொபைல் போன்கள் வாங்கினாலும், திருடப்பட்டவைகளா என்பதைதெரிந்து கொள்ளலாம். செயலியில், 26,874 திருட்டு மொபைல் போன்களில், விபரங்கள் பதிவேற்றம்செய்யப்பட்டு உள்ளன. பிற மாவட்டங்கள், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், திருடு போன போன் விபரங்களையும், பதிவேற்றம் செய்து வருகிறோம்.

ஜூன் 7ல், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் குறித்து, பொதுமக்கள், குற்றம் நிகழ்ந்த இடத்தில் இருந்தே, புகார் அளிக்க, 'ஜிசிடிபி' சிட்டிசன் சர்வீஸ் எனும், மொபைல் செயலியை அறிமுகம் செய்து வைத்தோம். அதன் வாயிலாக, பொது மக்கள்புகார் அளித்ததை அடுத்து, ஒரே வாரத்தில், போக்குவரத்து உட்பட, பல விதிமீறல்களில் ஈடுபட்ட, 102 போலீசார் மீது வழக்கு பதிந்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X