பொது செய்தி

தமிழ்நாடு

வாரச்சந்தையை மேம்படுத்த ரூ.40 லட்சம்: ஒன்றிய அதிகாரிகள் தகவல்

Added : ஜூன் 15, 2019
Advertisement

உடுமலை:குடிமங்கலம் ஒன்றியம் பூளவாடியில், வாரச்சந்தையை மேம்படுத்த, அரசின் சார்பில், 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.குடிமங்கலம் ஒன்றியம், பூளவாடி மற்றும் குடிமங்கலம் சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கான வாரச்சந்தை செயல்படுகிறது. சந்தை வளாகம், ஏழு சென்ட் அளவில் இட வசதி உள்ளது.
வாரம்தோறும், வெள்ளிக் கிழமையில் சந்தை நடக்கிறது.பூளவாடி அருகே உள்ள கொண்டம்பட்டி, கொள்ளுப்பாளையம், பெரியபட்டி மற்றும் குண்டடம், தாராபுரம் ஒன்றிய எல்லைகளில் உள்ள கிராமங்களும் பூளவாடி சந்தையை பயன்படுத்துகின்றனர்.காய்கறி மட்டுமின்றி, கால்நடைகளுக்கான சந்தையும் இங்கு நடக்கிறது. உடுமலை மற்றும் குடிமங்கலம் ஒன்றியத்தில், அதிக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வாரச்சந்தைகளில் பூளவாடி மட்டுமே முழுமையான செயல்பாட்டில் உள்ளது. இருப்பினும், போதிய பராமரிப்பில்லாமலும், சந்தைக்கான எந்த அடிப்படை வசதியும் இல்லை.விவசாயிகள், காய்கறிகளை சந்தைப்படுத்த, 'தார்பாய்'களில் மேற்கூரை அமைத்து, தற்காலிக மேடைகளை பயன்படுத்தினர். ஏற்கனவே இருக்கும் மேடைகளுக்கும் மேற்கூரை இல்லாமலும், சிதிலமடைந்த நிலையிலும் உள்ளன. சந்தை வளாகத்தை சுற்றிலும், சுற்றுச்சுவர் இல்லாமல், திறந்த வெளிக்கழிப்பிடமாவும், மாலையில் மதுஅருந்தும் கூடாரமாகவும் மாறியது.உள்ளாட்சி நிர்வாகங்கள் சந்தை மேம்பாட்டு பணிகளை கண்டுகொள்ளாமல் இருந்ததால், வாடிக்கையாளர்களும் விவசாயிகளும் வேதனையடைந்தனர். திறந்த வெளியில், அசுத்தமான சூழலுக்கு நடுவே விவசாயிகள் வேதனையோடு, காய்களை சந்தைப்படுத்துகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, சந்தையை மேம்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.நீண்ட ஆண்டுகால கோரிக்கைக்கு செவி சாய்த்து தற்போது, மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திட்ட இயக்குனர் ஆய்வுபி.டி.ஓ.,சுப்ரமணியம் கூறுகையில், '' பூளவாடி சந்தை வளாகத்தை மேம்படுத்தவும், பராமரிக்கவும், கட்டமைப்பு பணிகளுக்கும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 40 லட்சம் ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சந்தையில், 51 மேற்கூரையுடன் கூடிய கடைகள், வாகன நிறுத்தம், காய்கறிகளை இருப்பு வைத்துக்கொள்வதற்கு இரண்டு அறைகள், கழிப்பறை வசதிகளுக்கான கட்டமைப்பு பணிகள் துவங்க உள்ளது. வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் நடத்தப்படும்,'' என்றார்.பூளவாடி வாரச்சந்தை மேம்பாட்டுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையொட்டி, திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், சந்தை வளாகத்தில் ஆய்வு நடத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X