பொது செய்தி

தமிழ்நாடு

ஜமாபந்திக்கு வந்த 100 மனுக்கள் : 17க்கு உடனடி தீர்வு

Added : ஜூன் 15, 2019
Advertisement

உடுமலை:உடுமலையில் நடந்த ஜமாபந்தி, இரண்டாம் நாளில், நுாறு மனுக்கள் பெறப்பட்டன; 17 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.உடுமலை தாலுகா அலுவலகத்தில், நேற்றுமுன்தினம் ஜமாபந்தி துவங்கியது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சாகுல் அமீது, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். தாசில்தார்கள் தங்கவேல், கிருஷ்ணவேணி, தயாளன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
முதல் நாளில், 196 மனுக்கள் பெறப்பட்டன. இரண்டாம் நாளான நேற்று, தென்பூதிநத்தம், பூலாங்கிணர், ராகல்பாவி, ரா.வேலுார், வட பூதிநத்தம், போடிபட்டி, கண்ணமநாயக்கனுார்,1,2 ஆகிய கிராமங்களுக்கு நடந்தது. இதில், முதியோர் உதவி தொகை வேண்டி, 36 மனுக்களும், பட்டா மாறுதல் கேட்டு, 21 மனுக்களும், வீட்டுமனை பட்டா வேண்டி, 13 மனுக்கள் என, 100 மனுக்கள் பெறப்பட்டன.இதில், பட்டா மாறுதல் கோரிய 12 மனுக்களுக்கும், நத்தம்பட்டா மாறுதல் கோரிய, ஐந்து மனுக்கள் என, 17 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.வரும், 18 ம் தேதி, குறிச்சிக்கோட்டை உள்வட்டத்திற்குட்பட்ட, ஜல்லிபட்டி, லிங்கமாவூர், வெங்கிட்டாபுரம், சின்ன குமாரபாளையம், குறிச்சிக்கோட்டை, ஆலாம்பாளையம், தும்பலப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.
மடத்துக்குளத்தில் 808 மனு மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் நேற்றுமுன்தினம், சங்கராமநல்லுார், கொமரலிங்கம், பாப்பான் குளம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களுக்கும், நேற்று கணியூர், காரத்தொழுவு, துங்காவி, கடத்துார் கிராமங்களுக்குமாக ஜமாபந்தி நடந்தது.இதில், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, கணினி சிட்டா, ஜாதிச்சான்று உள்ளிட்ட பலவகையான சான்றிதழ்களுக்கு மக்கள் விண்ணப்பித்தனர். மொத்தம் 808 மனுக்கள் பெறப்பட்டன.கோட்டாட்சியர் அசோகன், தாசில்தார் பழனியம்மாள் மற்றும் அரசுத்துறையினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X