பொது செய்தி

தமிழ்நாடு

பொன்னேரியில் இருந்து சென்னைக்கு குடிநீர்: விவசாய கிணற்றில் இருந்து உறிஞ்சப்படுகிறது

Added : ஜூன் 15, 2019
Advertisement
 பொன்னேரியில் இருந்து சென்னைக்கு குடிநீர்: விவசாய கிணற்றில் இருந்து உறிஞ்சப்படுகிறது

பொன்னேரி:சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை குறைக்க, பொன்னேரி சுற்று வட்டார விவசாயநிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து அனுப்பப் படுகிறது.

இப்பணிகளை, 24 மணி நேரமும், குடிநீர் வாரியம் மேற்கொண்டு உள்ளது.சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஆகிய ஏரிகள் உள்ளன.இதில், பூண்டி தவிர, மற்ற ஏரிகள், தண்ணீர் வறண்டு போனதால், சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை குறைக்க, சென்னை குடிநீர் வாரியம், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கங்கையாடிகுப்பம் கிராமத்தில், விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கும் தண்ணீரை, சென்னைக்கு அனுப்பும் பணிகளை மேற்கொண்டு உள்ளது.இதற்காக, அங்குள்ள, 36 ஆழ்துளை கிணறுகளில், குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்த குழாய்கள், பெரிய தொட்டிக்கு எடுத்து வரப்பட்டு, அங்கிருந்து, ராட்சத மோட்டார் மூலம், 'பம்பிங்' செய்யப்படுகிறது.

இந்த நீர், மணலியில் உள்ள பம்பிங் ஸ்டேஷனுக்கு நேரிடையாக எடுத்துச் செல்லப்பட்டு, சென்னையின் பல பகுதிகளுக்கு, தேவைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படுகிறது.குடிநீரை வெளியேற்றும் ராட்சத மோட்டார்கள், தடையின்றி இயங்குவதற்கு, தனி மின்மாற்றி, ஜெனரேட்டர் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.விவசாய நிலங்களில், 36 மோட்டார்கள் மூலம், 10 நிமிடங்களுக்கு, 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

இதை கணக்கிட, மீட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இப்பகுதியில் தற்போது, 120 அடி நிலத்தடி நீர் இருக்கிறது.விவசாய மோட்டார்களில் இருந்து பெறப்படும் குடிநீர், உடனுக்குடன் சென்னைக்கு அனுப்பும் பணிகளை, 24 மணி நேரமும், குடிநீர் வாரிய அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் தெரிவித்து உள்ளதாவது:சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க உதவுவது மகிழ்ச்சியாக உள்ளது. இப்பகுதியில், தான் நிலத்தடி நீர், ஓரளவு நல்ல நிலையில் உள்ளது.நிலத்தடி நீரை பாதுகாக்க, இப்பகுதி நீர்நிலைகளைஆழப்படுத்தி, மழைநீரை சேமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X