பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் நிலைய பராமரிப்புக்கு, 'டெண்டர்'

Added : ஜூன் 15, 2019
Advertisement

மாதவரத்தில் கட்டப்பட்ட, முதலாவது அடுக்குதள புறநகர் பேருந்து நிலைய பராமரிப்பு பணிகளுக்கு, ஒப்பந்த நிறுவனத்தை தேடும் முயற்சியில், பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., ஈடுபட்டுள்ளது.

மாதவரத்தில், 8 ஏக்கர் நிலத்தில், 90 கோடி ரூபாய் செலவில், பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., புதிய புறநகர் பேருந்து நிலையத்தை கட்டியது.இதை, முதல்வர், இ.பி.எஸ்., அக்., 1ல் திறந்து வைத்தார். இதன் பின், பல வாரங்களாக, இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகள், இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்த துவங்கின.இருப்பினும், இந்த பேருந்து நிலையத்தில், இதுவரை முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. தற்காலிக ஏற்பாடாக, ஒரு நிறுவனத்தை, சி.எம்.டி.ஏ., அமர்த்தியது.இந்நிலையில், மாதவரம் பேருந்து நிலையத்துக்கு, பாதுகாவலர் நியமிப்பது, வளாகத்தை சுத்தப்படுத்துதல், குடிநீர் வசதி, மின் சாதனங்கள் பராமரிப்பு போன்ற பணிகளுக்கு ஆட்களை நியமிக்க, சி.எம்.டி.ஏ., முடிவெடுத்து உள்ளது.

இதற்கான தகுதி வாய்ந்த நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கியுள்ளது.பொருத்தமில்லாத ஒரு இடத்தில் பேருந்து நிலையம் கட்டியதால், இதை பயன்படுத்த போக்குவரத்து கழகங்களும், பொது மக்களும் இங்கு வர தயங்குகின்றனர். சென்னையின் பிற பகுதிகளில் இருந்து வருவோர், இந்த பேருந்து நிலையத்தை அணுகுவதில், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X