பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் :பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : ஜூன் 15, 2019
Advertisement

உடுமலை;உடுமலை, பள்ளிகளில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.உடுமலை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ேஹண்ட் இன் ேஹண்ட் அமைப்பு சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் பின்பற்றப்பட்டது. மாணவர்கள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்தனர்.
குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த உதவி செய்தல், குழந்தைகளுக்கான உரிமைகளை எடுத்துக்கூறுதல், பள்ளி செல்லாக் குழந்தைகளை ஊக்குவித்து மீண்டும் பள்ளியில் சேர்த்தல் குறித்து, ேஹண்ட் இன் ேஹண்ட் அமைப்பினர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், சைல்டு லைன் புகார் தெரிவிக்க, 1098 எண்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்தனர்.உடுமலை, எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளியில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தொழிலாளர் துறையைச் சேர்ந்த சிவகாமி, வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர்.ேஹண்ட் இன் ேஹண்ட் அமைப்பு திட்ட மேலாளர் துாயவன், மாணவர்களுக்கு, குழந்தை திருமணம், அடிப்படைக்கல்வி முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பள்ளி தலைமையாசிரியர் பூரணி மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாணவர்கள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்தனர்.உடுமலை, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவியர், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டோம். குழந்தைகள் பள்ளிக்குச்செல்வதை ஊக்குவிப்போம்.
குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்ற, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவோம் எனவும், உறுதிமொழி எடுத்தனர். தலைமையாசிரியர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். ஆசிரியர்களும், நிகழ்ச்சியில் பங்கேற்று, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X