பொது செய்தி

தமிழ்நாடு

கதவை திறந்து வைத்து தூங்காதீர்! போலீசார் வேண்டுகோள்

Added : ஜூன் 15, 2019
Advertisement

துரைப்பாக்கம்:ஐ.டி., ஊழியர்களுக்கு 'கதவை திறந்து வைத்து துாங்காதீர்' என, போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.ஓ.எம்.ஆர்., துரைப்பாக்கம் பகுதியில், ஐ.டி., ஊழியர்கள் தங்கி உள்ள வீடுகளில், 'லேப்டாப், மொபைல் போன்' உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி திருடு போகின்றன.

துரைப்பாக்கம் போலீசார் விசாரணையில், வேலுாரில் இருந்து, இரவு புறப்படும் கும்பல், காலை நேரத்தில், ஐ.டி., ஊழியர்கள் வீடுகளை குறிவைத்து திருடி, மீண்டும் பஸ் ஏறி, வேலுார் செல்வது தெரிந்தது.நேற்று முன்தினம், 16 வயது சிறுவனை கைது செய்தனர். கடந்த மாதம், இதே போன்று, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து, துரைப்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர், சரவணன் கூறியதாவது:பெரும்பாலான வீடுகளில், நான்கு - ஐந்து, ஐ.டி., ஊழியர்கள் சேர்ந்து தங்கி உள்ளனர். இவர்களில், சிலர் இரவு பணி, சிலர் பகல் பணிக்கு செல்கின்றனர். இரவு - பகல் என, ஒருவர் மாறி ஒருவர் வருவதால், வீட்டு கதவை பூட்டுவதில்லை.இதை சாதகமாக பயன்படுத்தும் கும்பல், விலை உயர்ந்த பொருட்களை திருடிச் செல்கிறது.

சந்தேகம் ஏற்பட்டால், காது கேளாதவர் போல் செய்கை காட்டி, ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும், அச்சு அட்டையை நீட்டி, உதவி கேட்பது போல் நடிப்பர்.இவர்களிடம், ஐ.டி., ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X