பொது செய்தி

தமிழ்நாடு

ஆலத்தூர் தொழிற்பேட்டைக்கு நிலம் பெறுவதில் தொடர் சிக்கல்

Added : ஜூன் 15, 2019
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அடுத்த ஆலத்துாரில், தொழிற்பேட்டைக்கு வழங்கப்படும் நிலத்துக்கு, வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், சராசரி விலையை கடைப்பிடிப்பது குறித்து பரிசீலிக்க, வருவாய் துறைக்கு, அரசு உத்தரவிட்டுஉள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அடுத்த ஆலத்துாரில், சிறுதொழில் வளர்ச்சி கழகமான, 'சிட்கோ' சார்பில், மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கான தொழிற்பேட்டை உள்ளது.இங்கு, 20க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த தொழிற்பேட்டையை விரிவாக்கி, புதிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களை அனுமதிக்க, சிட்கோ முடிவு செய்துள்ளது.இதற்கு தேவையான கூடுதல் நிலத்தை, வருவாய் துறையிடம் இருந்து பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விரிவாக்கத்துக்காக, சிட்கோ பெயருக்கு மாற்றப்படும் நிலங்களுக்கு, சந்தை நிலவர அடிப்படையில், வருவாய் துறை விலை நிர்ணயிப்பதால் சிக்கல் ஏற்பட்டது.இது குறித்து, தலைமை செயலர் தலைமையிலான உயர் நிலை ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.ஒரு அரசு துறையிடம் இருந்து, இன்னொரு அரசு துறைக்கு மாற்றப்படும் நிலங்களுக்கு, வணிக ரீதியில் சந்தை நிலவரப்படி விலை நிர்ணயிப்பதற்கு, இந்த கூட்டத்தில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, அரசின் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், அக்கம் பக்கத்து நிலங்களின் விலையுடன் ஒப்பிட்டு, சராசரி விலையை மதிப்பிட, வருவாய் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும், பிற அரசு துறைகளுக்கு நிலம் வழங்குவதற்கும், சிட்கோ போன்ற நிறுவனங்களுக்கு வழங்குவதற்கும் இடையிலான வேறுபாட்டை, அரசுக்கு எடுத்துரைக்கும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.பிற துறைகளுக்கு இடம் வழங்கும் போது, பள்ளி, மருத்துவமனை, அலுவலகம் என, மக்கள் சார்ந்த சேவைக்கு, அந்த நிலம் பயன்படுத்தப்படும்.
சிட்கோவிற்கு வழங்கப்படும் நிலம், வணிக ரீதியாக பயன்படுத்தப்படுவதால், அரசு துறைகளுக்கும் நிலம் வழங்கும் கோட்பாடு, அத்துறைக்கு பொருந்தாது என்பதே வருவாய் துறையின் வாதம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X