சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை இறப்பு

Added : ஜூன் 15, 2019
Advertisement

கூடலுார்:முதுமலை புலிகள் காப்பகம், முதுமலை வனச்சரகம் தண்டமூலா வனப்பகுதியில், வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அப்பகுதியில், பெண் யானை இறந்து கிடப்பது தெரிய வந்தது. அதன் உடலை முதுமலை துணை இயக்குனர் செண்பகபிரியா, வனச்சரகர் தயானந்தன் ஆகியோர் நேற்று, காலை ஆய்வு செய்தனர். மசினகுடி அரசு கால்நடை டாக்டர் கோசலன், ஆவின் கால்நடை டாக்டர் பாரத்ஜோதி ஆகியோர் அதன் உடலை பிரேத பரிசோதனைசெய்தனர்.வனத்துறையினர் கூறுகையில்,ரசாயன பரிசோதனைக்காக யானையின் உடல் பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. முடிவுகள் வந்த பின்பு, மற்ற விபரங்கள் தெரிவிக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X