பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் பாதையில் யானைகள்: வனத்துறையினர் கண்காணிப்பு

Added : ஜூன் 15, 2019
Advertisement
 ரயில் பாதையில் யானைகள்: வனத்துறையினர் கண்காணிப்பு

குன்னுார்:குன்னுார் ரயில் பாதையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை, கண்காணித்து விரட்டும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.குன்னுார் -மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதிகள், யானை வழித்தடமாக உள்ளது. தற்போது, இங்கு மூன்று குட்டிகள் உட்பட, 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
பலா பழம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக, பர்லியார், மரப்பாலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உலா வந்த இந்த யானைகள், தற்போது காட்டேரி அருகேயுள்ள, ரன்னிமேடு ரயில் பாதைக்கு வந்துள்ளன.வனப்பகுதிகளில் உணவை உட்கொள்ளும் இந்த யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக ரன்னிமேடு ரயில் நிலையத்திற்கு, அவ்வப்போது வருகின்றன.
அப்போது இவற்றை வழி நடத்தி செல்லும் முதல் யானை வந்த பிறகு, மற்ற யானைகள் அதனை பின்பற்றி தண்ணீர் குடிக்க ரன்னிமேடுக்கு வருகின்றன. இங்கு, குன்னுார் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மலை ரயில் வரும் காலை மற்றும் மாலை நேரங்களில் ரயில்வே ஊழியர்களும் தொடர்ந்து கண்காணித்து, ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X