பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சியில் நாளை 'உங்களால் முடியும்'

Added : ஜூன் 15, 2019
Advertisement

சென்னை:இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த நுணுக்கங்களை, மாணவர்கள் தெரிந்து கொள்ள, தினமலர், 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி, நாளை, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் நடக்கிறது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர, தமிழக அரசின் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்துள்ளனர்.கவுன்சிலிங்கில் மாணவர்கள் பங்கேற்று, பாட பிரிவுகளை தேர்வு செய்வது குறித்து விளக்கம் தரும், 'உங்களால் முடியும்' என்ற நிகழ்ச்சிக்கு, நம் நாளிதழ் ஏற்பாடு செய்துள்ளது.சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

சென்னை, தி.நகர், மஹாராஜபுரம் சந்தானம் சாலையில், முப்பாத்தம்மன் கோவில் எதிரில் உள்ள, கிருஷ்ண கான சபாவில், நாளை காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை, உங்களால் முடியும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

காஞ்சிபுரம், வைகுண்ட பெருமாள் கோவில், வடக்கு மாட வீதியில் உள்ள, ராதா பார்ட்டி ஹாலில், மாலை, 4:00 மணி முதல், 7:00 மணி வரை, நடத்தப்படுகிறது. இதில், இன்ஜி., கவுன்சிலிங் தொடர்பான நுணுக்கங்கள் குறித்து, வல்லுனர்கள் விளக்கம் தர உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X