பொது செய்தி

தமிழ்நாடு

இன்னும் 16 நாட்கள் வசந்த மண்டபத்திற்கு சாய்தளம் தேவை :மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சிரமம்

Added : ஜூன் 15, 2019
Advertisement
இன்னும் 16 நாட்கள் வசந்த மண்டபத்திற்கு சாய்தளம் தேவை :மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சிரமம்

காஞ்சிபுரம்:அத்தி வரதர் அருள்பாலிக்க உள்ள வசந்த மண்டப படிகள் செங்குத்தாக இருப்பதால், முதியோர், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, சாய்தளம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம், ஜூலை, 1ல் துவங்குகிறது.குளத்திலிருக்கும் தண்ணீரை வெளியேற்றிய பின், அனந்தசரஸ் தெப்பக்குளத்தில் இருந்து, அத்திவரதர் எழுந்தருளுவார்.ஜூலை, 1 முதல், கோவில் வசந்த மண்டபத்தில், 48 நாட்களுக்கு, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்

இதில், முதலில், 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த, 24 நாட்கள் நின்ற கோலத்திலும் எழுந்தளுவார்.இந்த வைபவத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் என, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வர உள்ளனர்.பக்தர்களின் வசதிக்காக, 12.89 கோடி ரூபாயில், விழாவிற்கான ஏற்பாடுகள், தீவிரமாக நடக்கின்றன.

அத்தி வரதர், பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கும் வசந்த மண்டபம், மேற்கு ராஜ கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன், வலது புறத்தில் உள்ளது.வைபவத்தையொட்டி, வசந்த மண்டபம் சீரமைப்பு பணி நடக்கிறது. இதில், தரைப்பகுதிக்கு வெண்மை நிற கருங்கற்கள் பதித்தல், வெள்ளையடிக்கும் பணிகள் நடக்கின்றன.இந்த மண்டபத்திற்கு செல்ல மொத்தம், 11 படிகள் உள்ளன.

வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், நடக்க முடியாதவர்கள் படிகளில் ஏறிச்சென்று சுவாமியை தரிசனம் செய்ய மிகவும் சிரமப்படுவர்.எனவே, படிகளில் சாய்தளம் அமைத்து, 'வீல் சேர்' வசதியும் ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X