குடிநீர் உறிஞ்சிய ஆறு மின் மோட்டார்கள் பறிமுதல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் உறிஞ்சிய ஆறு மின் மோட்டார்கள் பறிமுதல்

Added : ஜூன் 15, 2019

கிதிரிப்பேட்டை:வாலாஜாபாதில், குடிநீர் உறிஞ்சிய, ஆறு மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாலாஜாபாத் அடுத்த, கிதிரிப்பேட்டை ஊராட்சியில், பாலாறு குடிநீர் பைப் லைனில், சிலர், மின் மோட்டார் அமைத்து, குடிநீரை உறிஞ்சி வந்தனர்.இதனால், கிதிரிப்பேட்டை கிராமத்தில், பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.இதை தடுக்க, மின் மோட்டாரில், முறைகேடாக குடிநீரை உறிஞ்சக்கூடாது என, ஊராட்சி நிர்வாகம் துண்டு பிரசுரம் வழங்கி இருந்தது.

இருப்பினும், சிலர், மின் மோட்டாரை அமைத்து, குடிநீர் உறிஞ்சி வந்தனர்.இதையடுத்து, வாலாஜாபாத் பி.டி.ஓ., சீனிவாசன் தலைமையில், ஊரக வளர்ச்சி துறையினர், முறைகேடாக குடிநீர் உறிஞ்சுவதற்கு பயன்படுத்திய, ஆறு மின் மோட்டார்களை, நேற்று பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X