பொது செய்தி

தமிழ்நாடு

'குரூப் - 4' பயிற்சி 17ல் துவக்கம்

Added : ஜூன் 15, 2019
Advertisement

காஞ்சிபுரம்:'குரூப் - 4' தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், வரும், 17ம் தேதி முதல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் துவங்குவதாக, கலெக்டர், பொன்னையா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 10ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை, இப்போட்டி தேர்வுக்கு தயாராகின்றனர். இளைஞர்கள், பெண்கள் என, அனைத்து தரப்பினரும், போட்டித் தேர்விற்கு தயார் செய்து கொள்ளும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.

தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், வரும், 17 முதல் துவங்குகிறது.ஒவ்வொரு வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை, அலுவலக நாட்களில், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை நடைபெறவுள்ளது.போட்டித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பிக்க உள்ளவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி, இலவச பயிற்சியில் சேர பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள் என, கலெக்டர், பொன்னையா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X