பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Added : ஜூன் 15, 2019
Advertisement

குன்னுார்:குன்னுார் சிம்ஸ்பூங்கா மற்றும் சேலாஸ் நெடுஞ்சாலையோரத்தில் இருந்த, 20க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.நீலகிரியில், கோர்ட் உத்தரவின் பேரில், நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாநில நெடுஞ்சாலை துறையின் சார்பில், காட்டேரி பகுதியில் கடைகள் அகற்றப்பட்டன.
தொடர்ந்து சிம்ஸ்பூங்கா அருகே, கடைகள் அகற்ற வந்த போது, குன்னுார் எம்.எல்.ஏ., சாந்திராமு, 2 மாதங்களுக்கு அவகாசம் கேட்டதால், நிறுத்தப்பட்டது.இந்நிலையில், நேற்று ஊட்டி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் விஸ்வநாதன் அறிவுறுத்தலின் பேரில், உதவி கோட்ட பொறியாளர் பாரிஜாதம், உதவி பொறியாளர் சங்கர் தலைமையில், நெடுஞ்சாலை துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் கடைகளை அகற்ற சென்றனர். இதனை தொடர்ந்து கடைகளை வைத்திருந்தவர்கள் உடனடியாக தாங்களாகவே பொருட்களை எடுத்து அகற்றினர். மேலும், அங்கிருந்த புறக்காவல் நிலையமும், பொக்லைன் மூலம் அகற்றப்பட்டது.தொடர்ந்து, சேலாஸ் பகுதியில், நோட்டீஸ் வழங்கப்பட்ட 34 கடைகள் அகற்ற நெடுஞ்சாலை துறையினர் சென்றனர். அங்கு, 'சர்வே கற்கள் மாறியுள்ளது,' என கூறி சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து, மீண்டும் சர்வே துறையினர், அளவீடு செய்ய ஒரு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில்,' இப்பணிகள் முடிந்தவுடன் இங்குள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X