பொது செய்தி

தமிழ்நாடு

பில்லாபாங் பள்ளியில் அட்சரம் ஆரம்பம்

Added : ஜூன் 15, 2019
Advertisement
 பில்லாபாங் பள்ளியில்  அட்சரம் ஆரம்பம்

ஆர்.கே.பேட்டை:பில்லாபாங் பள்ளியில், மழலையர் வகுப்பில் சேர்ந்துள்ள குழந்தைகளுக்கு, பாரம்பரியமான முறையில், அட்சரம் பழகும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.

ஆர்.கே.பேட்டை அடுத்த, எஸ்.வி.ஜி.புரத்தில் உள்ளது, பில்லாபாங் பள்ளி. இந்த பள்ளியில் படிக்கும் மாண - மாணவியருக்கு, பாடத்திட்டத்துடன் பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.இந்த கல்வி ஆண்டில், மழலையர் வகுப்பில் புதிதாக சேர்ந்துள்ள குழந்தைகளுக்கு, நேற்று, அட்சரம் பழகும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி முதல்வர், நரேன் பாபு முன்னிலை வகித்தார். தாளாளர் சி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பாரம்பரியமான முறையில், வாழையிலையில், பச்சரிசியை பரப்பி வைத்து, குழந்தைகளின் விரலை பிடித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், அட்சரம் பழக வைத்தனர்.சர்வதேச பள்ளியில், பழமை மாறாமல் அட்சரம் பழகும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதில், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X