சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : ஜூன் 15, 2019
Advertisement

முதியவர் சடலம் மீட்பு
செவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டை அடுத்த, தொழுவூர் அருகே, நேற்று மதியம், 65 வயது மதிக்கத்தக்க, வெள்ளை சட்டை மற்றும் வேஷ்டி அணிந்த முதியவர் ஒருவர், சாலையோரம் இறந்து கிடப்பதாக, தகவல் அளிக்கப்பட்டது.செவ்வாப்பேட்டை போலீசார், இறந்து கிடந்த முதியவர் சடலத்தை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரித்து வருகின்றனர்.
'டாஸ்மாக்' பூட்டு உடைப்பு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த, ரெட்டம்பேடு கிராமத்தில் உள்ள, 'டாஸ்மாக்' கடையின் முன்பக்க கிரில் கேட்டை, நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் சிலர் உடைத்தனர்.உடைக்கும் போது, திறக்க முடியாதபடி, 'ஷட்டர்' சிக்கிக்கொண்டதால், மர்ம நபர்களால், கடைக்குள் நுழைய முடியாமல் போனது.இதனால் கடையில் இருந்த பணம் மற்றும் சரக்குகள் தப்பின. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


கணவர் மரணம்: மனைவி புகார்

திருமழிசை: வெள்ளவேடு அடுத்த, திருமழிசையசை் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் ராஜ், 45. இவரது மனைவி லட்சுமி, 39.கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில், 13ம் தேதி மாலை, திருமழிசை மேட்டுத்தாங்கல் பங்காரு கால்வாய் அருகே, ராஜ் இறந்து கிடந்தார். இது குறித்து, லட்சுமி புகாரையடுத்து, வெள்ளவேடு போலீசார், சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.

மயங்கி விழுந்தவர் பலி
கொப்பூர்: கடம்பத்துார் ஒன்றியம் கொப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்தவத்சலம் மகன் பலராமன், 50. இவர், இரு தினங்களுக்கு முன், கத்திரிக்காய் தோட்டத்தில், பூச்சிக் கொல்லி மருந்து அடித்தார்.அப்போது, திடீரென மயக்கமடைந்து விழுந்தார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மணவாள நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்

மணவாளநகர்: மணவாள நகர் அடுத்த, போளிவாக்கம் சத்திரம் பகுதிகளில் இருந்து, மணல் கடத்தி வந்த, மூன்று, 'டிப்பர்' லாரிகளை, ரோந்து பணியில் இருந்த, மணவாள நகர் போலீசார், நேற்று முன்தினம் இரவு மடக்கினர்.வழக்கு பதிந்து, தப்பியோடிய லாரி ஓட்டுகளை, போலீசார் தேடுகின்றனர். லாரிகளை பறிமுதல் செய்தனர்.


பள்ளி மாணவன் மாயம்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தைச் சேர்ந்தவன், மோகன் மகன் வம்சிகிருஷ்ணா, 14; 10ம் வகுப்பு மாணவன்.கடந்த, 15ம் தேதி, கொருக்குபேட்டையில் உள்ள தாத்தா வீட்டிற்கு புறப்பட்டு சென்றவன், வீடு திரும்பவில்லை. மோகன் புகாரையடுத்து, பாதிரிவேடு போலீசார், விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X