பொது செய்தி

தமிழ்நாடு

தேயிலை தோட்டங்களில் 'செல்பி' சுற்றுலா பயணிகள் ஆர்வம்

Added : ஜூன் 15, 2019
Advertisement
 தேயிலை தோட்டங்களில் 'செல்பி'  சுற்றுலா பயணிகள் ஆர்வம்

கூடலுார்:நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூடலுார் பகுதியில், தேயிலை தோட்டங்களில் 'செல்பி' எடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கூடலுார் வழியாக வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். இவர்கள், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்துக்கு வந்து செல்கின்றனர்.
மேலும், தேவர்சோலை சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி பசுமையான தேயிலை தோட்டங்கள், மேகமூட்டத்தை ரசித்து 'செல்பி' எடுத்து செல்வதிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'சுற்றுலா பயணிகள் வாகனங்களை சாலையோரங்களில், வளைவான பகுதிகளில் நிறுத்துவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வனத்தை ஒட்டிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி, ஓய்வெடுத்து செல்லும் போது, வன விலங்குகளால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க, சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி இயற்கையை ரசிக்க வசதியாக காட்சி கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X