பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...திருவள்ளூர்

Added : ஜூன் 15, 2019
Advertisement

100 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

திருத்தணி: திருத்தணி நகராட்சிக்குட்பட்ட கடைகளில், நகராட்சி பொறியாளர், விஜயராஜகாமராஜ், சுகாதார ஆய்வாளர் மாரிமத்து மற்றும் ஊழியர்கள், நேற்று, திடீர் சோதனை செய்தனர்.தடை செய்யப்பட்ட, 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கடைகாரர்களிடம் இருந்து, மொத்தம், 5,000 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.


செல்லியம்மனுக்கு பால் அபிஷேகம்
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை சுற்று பகுதிகளில், வெயில் உக்கிரமாக இருக்கிறது. இதனால், மழை வேண்டி, ஊத்துக்கோட்டை ஏரிக்கரையை ஒட்டியுள்ள செல்லியம்மன் கோவிலில், நேற்று காலை, 108 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து, மஹா தீபாராதனை காட்டப்பட்டது.


5 பேருக்கு உடனடி பட்டா

திருத்தணி: திருத்தணி தாலுகா அலுவலகத்தில், நேற்று நடந்த ஜமாபந்தியில், மொத்தம், 224 பேர் பங்கேற்று கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். இதில், ஐந்து பேருக்கு, எம்.எல்.ஏ., பட்டா வழங்கினார். தகுதியில்லாத, 28 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள, 162 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X