பொது செய்தி

இந்தியா

மெட்ரோ ரயிலில் இலவச பயண திட்டம் சரியல்ல: மோடிக்கு ஸ்ரீதரன் கடிதம்

Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (31)
Advertisement
மெட்ரோ ரயிலில் இலவச பயண திட்டம் சரியல்ல: மோடிக்கு ஸ்ரீதரன் கடிதம்

புதுடில்லி : ''டில்லி மெட்ரோவில் பெண்கள், இலவச பயணம் செய்யும் திட்டம் சரியானது அல்ல இதற்கு பிரதமர் ஒப்புதல் அளிக்க கூடாது என மெட்ரோ மேன் எனப்படும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

தேசிய தலைநகர், டில்லியில் இயக்கப்படும், அரசு பஸ்கள், மெட்ரோ ரயில்களில், பெண்கள் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்,'' என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2-ம் தேதி அறிவித்தார்.

இந்த பயண திட்டம் குறித்து இந்திய பொறியியல் துறையில் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரியும் , பல்வேறு மெட்ரோ ரயில் திட்டங்களின் ஆலோசகராக செயல்பட்டவருமான ஸ்ரீதரன் எதிர்ப்பு தெரிவித்துளார். . இவர் இந்தியாவின் மெட்ரோ மேன் என்றழைக்கப்படுகிறார்.






நேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் டில்லி முதல்வர் அறிவித்துள்ள இலவச மெட்ரோ பயண திட்டம் சரியானது அல்ல. இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மெட்ரோ ரயில் திவாலாகிவிடும். இதற்கு பிரதமர் ஒப்புதல் அளிக்க கூடாது இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
16-ஜூன்-201905:16:52 IST Report Abuse
Viswam இலவசம் ஆக்கினால் பாக்கி சொச்ச மிச்சமிருக்கு மெட்ரோ மூன்றாம் கட்ட பணிகள் மற்றும் இனி வரும் நாட்களில் தொண்டாகப்போகும் மெட்ரோ நான்காம் கட்ட (இருபத்து ஐந்தாயிரம் கோடிக்குமேல்) பணிகளுக்கு எப்படி முதலீடு செய்வது? இந்த மாதிரி இலவசம் மெட்ரோ ஊழியர்கள் சம்பளம் மற்றும் வண்டிகள் பராமரிக்கும் செலவினங்களை போட்டுப்பார்க்கும். கையில் காசில்லாத நிலை வருமென்று நரியான குஜிலிவாலுக்கு நன்றாக தெரியும். அப்புறமென்ன, தேர்தல் நேரத்தில் மத்திய அரசு இந்த திட்டங்களுக்கு பணம் தரவில்லை மப்ளர் போட்டுகொண்டு மோடியை குறை சொன்னால் போச்சு. ஆனால் ஏமாறுவதற்கு டெல்லிவாசிகள் ஒன்றும் கழக கண்மணிகள் அல்லவே. கட்டாயம் இந்த முறை ஆப்புக்கு ஆப்புதான்.
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
15-ஜூன்-201915:53:14 IST Report Abuse
Loganathan Kuttuva ரயில் கட்டணத்தை விட மெட்ரோ ரயில் கட்டணம் அதிகம்.அதை ஓரளவு குறைக்கலாம்.இலவசத்தை தவிர்க்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
sri - mumbai,இந்தியா
15-ஜூன்-201914:32:30 IST Report Abuse
sri இந்த மாதிரி எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்துதான் கெஜ்ரிவால் இதை அமுலாக்கப்பார்கிறார். அடுத்த தேர்தலில் நான் கொடுக்க விழைந்த இலவசத்திற்கு பாஜக முட்டுக்கட்டை போட்டதென்று சொல்லி இன்னும் ஐந்து வருடம் ஆட்சியிலிருக்க இப்போதே முஸ்தீபு. இல்லாவிட்டால் கடந்த ஐந்து வருடத்தில் இவர் கிழித்தது வேறென்ன?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X