அரசியல் செய்தி

தமிழ்நாடு

சமமாக இருப்பதுதான் வெற்றி பிரேமலதா

Added : ஜூன் 15, 2019
Advertisement

அவனியாபுரம்:''கடந்த தேர்தலில் தி.மு.க, ஜீரோ எடுத்தது. இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி தோல்வியை சமமாக எடுத்துக் கொள்வதுதான் உண்மையான வெற்றி,'' என தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தலைப் பொறுத்தவரை நான் ஏற்கனவே கூறியுள்ளது போல் இந்த கூட்டணி தொடரும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி சார்பில் யார் யார் எங்கெங்கு போட்டியிடுவர் என அறிவிக்கப்படும்.வெற்றி பெற்றால் ஒரு விமர்சனமும், தோல்வி அடந்தால் ஒரு விமர்சனமும் கூறுவது இயற்கை. ஆனால் வெற்றி தோல்விகளை சமமாக எடுத்துக் கொள்வதுதான் உண்மையான வெற்றி.
வெற்றி பெற்றால் மொத்த பலனும் ஒருவருக்கு செல்கிறது எனக் கூறிவிட முடியாது. தோல்வி அடைந்தால் ஒட்டுமொத்தமாக ஒருவர் மீது பழி சுமத்துவதும் தவறு.கடந்த தேர்தலில் தி.மு.,க விற்கு கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு கிடைக்கவில்லை. அவ்வளவு தானே தவிர எந்த மாற்றமும் நடக்கவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாறும் என்றனர். ஆனால் எந்த ஆட்சியும் மாறவில்லை. ஓட்டு வங்கி குறையவே இல்லை.இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X