பொது செய்தி

இந்தியா

மே.வங்கத்தில் 700 டாக்டர்கள் ராஜினாமா

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (9)
Advertisement
மே.வங்கம், டாக்டர்கள், ராஜினாமா,

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் போராட்டம் நடத்தும் ஜூனியர் டாக்டர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட டாக்டர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால், முதல்வர் மம்தா வசமுள்ள சுகாதாரத்துறை திணறி வருகிறது.

கோல்கட்டா அரசு மருத்துவமனையில், பயிற்சி டாக்டர்கள் சரியாக கவனிக்காததால் உயிரிழந்ததாக கூறி டாக்டர்களை நோயாளியின் உறவினர்கள் தாக்கினர். இதனையடுத்து, பாதுகாப்பு கேட்டு, டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.
போராட்டம் நடந்த மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ., கம்யூனிஸ்ட்களின் தூண்டுதலின் காரணமாக தான் டாக்டர்கள் போராட்டம் நடத்துவதாக குறிப்பிட்டார். இதனால், கோபமடைந்த டாக்டர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ஜூனியர் டாக்டர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மூத்த டாக்டர்கள் பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். என்ஆர்எஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவி விலகியுள்ளனர். சாகோர் தத்தா மருத்துவமனையை சேர்ந்த 21 டாக்டர்கள் ராஜினாமா செய்தனர்.






நேற்று (ஜூன் 14) ஆர்ஜிகர் மருத்துவ கல்லூரி டாக்டர்கள் 107 பேர் , மருத்துவ கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த 100 பேர், எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையை சேர்ந்த 175 பேர், சித்ரஞ்சன் தேசிய மருத்துவ கல்லூரியை சேர்ந்த 17 பேர், என்ஆர்எஸ் மருத்துவ அறிவியல் கல்லூரியை சேர்ந்த 100 பேர், ட்ரோபிகல் மருத்தவ கல்லூரியை சேர்ந்த 33 பேர் ராஜினாமா செய்தனர். பல துறைகளை சேர்ந்த மூத்த டாக்டர்களும் பதவி விலகி வருகின்றனர்.






ஜூனியர் டாக்டர்களின் போராட்டம் காரணமாக கோமா நிலைக்கு சென்றுள்ள, முதல்வர் மம்தா பானர்ஜி வசமுள்ள சுகாதாரத்துறை , டாக்டர்கள் பதவி விலகல் காரணமாக அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திணறி வருகின்றனர். மாநிலம் முழுவதும் வெளிநோயாளிகள் பிரிவு மூடப்பட்டு கிடந்தன. பொது மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
15-ஜூன்-201914:22:49 IST Report Abuse
தமிழ் மைந்தன் நல்லா இருந்த மேற்கு வங்கம்.....நம்ம ஜாக்டோ ஜியோ வின் ஊழல்தலைமை .அங்கே போச்சு......அங்கே இப்ப ஒரே போராட்டம்.....நம்ம ராசி...அப்படி.......
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
15-ஜூன்-201916:41:18 IST Report Abuse
Chowkidar NandaIndia"தன் வாழ்நாளில் சுடலை குஜராத்தில் தப்பி தவறியும் காலடி எடுத்து வைக்க வேண்டாம்" என்று இங்கு வசிக்கும் நாங்கள் அவரை மிகவும் தாழ்மையுடனும், வேண்டியும் கேட்டுக்கொள்கிறோம். ஹா ஹா ஹா....
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
15-ஜூன்-201912:47:03 IST Report Abuse
blocked user உயிர் காப்பவர்கள் உயிருக்கு பயந்து வேலை வேண்டாம் என்று ஓடுகிறார்கள் என்றால் இது ஒரு அசாதாரண சூழ்நிலை. ஜனாதிபதி தனது கடமையை செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
15-ஜூன்-201912:13:07 IST Report Abuse
 N.Purushothaman தன் நாக்கையும் சொல்லையும் அடைக்க முடியாத அளவிற்கு மம்தாவின் மமதை தலைக்கேறிவிட்டது .... எல்லாவற்றிலும் அரசியலை புகுத்தி அசிங்கப்பட்டு கொண்டு இருக்கிறார்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X