பொது செய்தி

தமிழ்நாடு

குவைத்தில் பட்டினியில் தவிக்கும் தமிழக டிரைவர்

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (23)
Advertisement

விழுப்புரம் : கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, பசி பட்டினியோடு குவைத்தில் தமிழர் ஒருவர் தவித்து வருகிறார். தன்னை இந்திய துாதரகம் மூலம் மீட்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே ரெங்கநாதபுரத்தை சேர்ந்த செங்கோல் என்பவரது மகன் யேசுராஜ், 32. திருமணமாகி மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர், கடந்த 2014ல் நண்பர் ஒருவர் மூலம் குவைத்தில் டிரைவர் வேலைக்கு சென்றார்.


பாலை வனத்தில்...


குவைத்தில் ஜெல்லையா என்னும் பாலைவனப்பகுதியில் ஆட்டுப் பண்ணைக்கு டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டும் செல்லும் பணியில் சேர்ந்தார். எப்போதும் பாலைவனத்திலேயே பணி. குவைத்தின் நகர்ப்புறத்தையே அவர் பார்த்ததில்லை.


விபத்து :


2015ல் அவர் டேங்கர் லாரியில் சென்றபோது, பின்னால் வந்த வாகனம் ஒன்று இவரது டேங்கர் மீது மோதி அதில் இருந்த இரு மாணவர்கள் பலியாயினர். இந்த வழக்கில் யேசுராஜ் கைதானார். அவர் மீது விபத்து வழக்கு உள்ளது.


பண்ணை அடிமை :


இதையே காரணம் காட்டி, பண்ணை நடத்தும் நபர், யேசுராஜை அடிமைபோல நடத்த துவங்கியுள்ளார். சொந்த ஊருக்கும் அனுப்ப மறுத்தார். மிக குறைவான சம்பளம் கொடுத்துள்ளார். எனவே தற்போது அவர் அங்கிருந்து தப்பி குவைத் நகர்ப்புறத்திற்குள் வந்துள்ளார்.அவர் கூறுகையில், '' நான் குவைத்திற்கு வந்து ஐந்தரை ஆண்டுகள் ஆகிறது. இப்போதுதான் நகர்ப்புறத்தையே பார்க்கிறேன். டேங்கர் லாரி மீது இன்னொரு வாகனம் மோதிய விபத்தில் என் மீது எந்த தவறும் இல்லை.
இருப்பினும் வழக்கை முடிக்காமல் பண்ணை முதலாளி என்னை மிரட்டிவருகிறார். இதுகுறித்து குடும்பத்திற்கும் தகவல் தெரிவித்தேன். மனைவி மேரி, மகள்கள் மரியா, ரோசி ஆகியோர் விழுப்புரம் கலெக்டரை சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


பசியால் தவிப்பு :


என் மீதான விபத்து வழக்கை இதற்குள் முடித்திருக்கலாம். வேண்டு மென்றே என்னை கொடுமைபடுத்துகிறார்கள். நான் குவைத்திற்கு வந்து ஐந்தரை ஆண்டுகள் ஆகிறது. தற்போது தமிழர் ஒருவரின் பாதுகாப்பில் உள்ளேன். அவரும் சாதாரண வேலை செய்பவர்தான். எனவே ஒரு நேரம் மட்டுமே உணவு கிடைக்கிறது. என்னை இந்திய துாதரகத்தின் மூலம் மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.


குவைத்தில் யேசுராஜின் தொடர்பு எண் : 96595529732

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Venkatachalam - Chennai,இந்தியா
15-ஜூன்-201920:52:55 IST Report Abuse
V Venkatachalam சற்குணம் மோகன் லாசரஸ் இவங்களுக்கு சாத்தானை கொண்டு வந்து இந்துக்களிடம் விடறது தான் வேலை. அதை விரட்ட இவங்க வர மாட்டாங்க. அவங்களிடம் இருக்கும் சாத்தானை யே அவங்களால் விரட்ட முடியல.
Rate this:
Share this comment
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
15-ஜூன்-201919:54:18 IST Report Abuse
Asagh busagh இந்தியாவுல இன பெருக்கத்த கட்டுப்படுத்துனா இந்த மாதிரி அடிமட்ட பணிக்கெல்லாம் பாலைவன நாடுகளுக்கு நம்ம மக்கா போக தேவையே இருக்காது.
Rate this:
Share this comment
Cancel
sekar Ng -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூன்-201918:42:29 IST Report Abuse
sekar Ng ஆமைகறியான் காப்பாற்றுவான். ஆம் அவன் நாம் தமிழன் வியாபாரி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X