பொது செய்தி

இந்தியா

மழை நீரை சேமியுங்கள்: கிராம தலைவர்களுக்கு பிரதமர் கடிதம்

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (24)
Advertisement
மழை நீர், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், பிரதமர் மோடி, கடிதம்

புதுடில்லி: மழை நீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: அன்பிற்குரிய பஞ்சாயத்து தலைவர்களுக்கு வணக்கம். நீங்கள், மற்றும் பஞ்சாயத்தில் வசிக்கும் எனது சகோதரர், சகோதரிகள் அனைவரும் நலமாக வசீப்பீர்கள் என நம்புகிறேன்.
மழைக்காலம் விரைவில் துவங்க உள்ளது. அதிகளவு மழை தண்ணீர் கிடைப்பதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்வோம். இந்த மழை தண்ணீரை சேகரிக்க நாம் அனைத்து முயற்சிகளையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். கிராம பஞ்சாயத்துகளை கூட்டி, இந்த கடிதத்தை சத்தமாக படிக்க வேண்டும்.
மழை நீரை எப்படி சேகரிப்பது என்பது குறித்து பஞ்சாயத்துகளில் விவாதம் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு துளி மழைநீரையும் சேகரிக்க நீங்கள் அனைவரும் தேவையான ஏற்பாடுகளை செய்வீர்கள் என நான் நம்புகிறேன். மழை நீரை முறையாக சேகரிக்க, தடுப்பணைகள் மற்றும் குளங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த பருவமழையின் போது, கிராம மக்கள், மழை தண்ணீரை சேகரிக்க , கிராம தலைவர்கள் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.





ஒரு பக்கம் கொண்ட இந்த கடிதத்தில், பிரதமர் மோடி கையெழுத்திட்டு உள்ளார். மாவட்ட கலெக்டர்கள் மூலம், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உ.பி., கிராம பகுதிகளில், இந்த கடிதம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏராளமான கிராமத்தினர், இந்த கடிதம் குறித்து பேசி வருகின்றனர். வாரணாசி தொகுதியில் அமைந்துள்ள சோன்பந்த்ரா பகுதியில் உள்ள 637 கிராம தலைவர்களுக்கு இந்த கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள 601 கிராம தலைவர்களிடம் , பிரதமர் மோடியின் கடிதத்தை மாவட்ட கலெக்டர் உமேஷ் மிஸ்ரா வழங்கியுள்ளார். அந்த மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் உள்ள 775 குளங்களை தூர்வார கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் 500 குளங்களை தூர்வார்வதற்கான பணிகள் துவங்கியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-ஜூன்-201921:23:08 IST Report Abuse
தமிழ்வேல் நல்லகருத்து. மக்கள் எப்படியெல்லாம் மழைநீரை சேமிக்கலாமென்று டிவி களில் குறும்படம் மூலம் விளக்கவேண்டும். வீடுகள் கட்டும்போது மழைநீரை சேமிக்கும் வழிகளைக் கட்டாயப்படுத்தவேண்டும். செய்யாதவர்களுக்கு வீட்டுவரியை அதிகரிக்கலாம். தடுப்பணை தூர்வாருதல் ............. போன்றவற்றிற்கு பொதுத்துறை அமைச்சர்களுக்கு பிரதமர் "நேரடியாக (ஒதுக்கீட்டுடன்)" எழுதலாம்.
Rate this:
Share this comment
Cancel
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
15-ஜூன்-201917:13:04 IST Report Abuse
Sridhar Rengarajan 2001 - 2006 ஆட்சி காலத்தில் மழை நீர் சேகரிப்பை ஜெயலலிதா வலியுறுத்தி அதை செயல்படுத்தி ஓரளவு வெற்றியும் கண்டார். ஆரம்பத்தில் மக்கள் ஆர்வம் காட்டாவிட்டாலும் நாளடைவில் அதன் பலன் உணர்ந்து செயல்பட்டனர். ஆனால் அதை தொடர்ந்து வந்த கருணாநிதியின் மைனாரிட்டி அரசு அந்த திட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டது. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறோம். இனியாவது அரசை மட்டுமே நம்பிக்கொண்டிருக்காமல் மக்கள், தனியார் நிறுவனங்கள் இணைந்து மழை நீர் சேகரிப்பவை தீவிரப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தாகம் தீர்க்க மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை விற்க ஆரம்பித்து விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
15-ஜூன்-201917:03:00 IST Report Abuse
Chowkidar NandaIndia என்ன இருந்தாலும் இறந்தவர்களை எழுப்பும் உமா ஷங்கரின் கண்டுபிடிப்பு போல வருமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X