பொது செய்தி

இந்தியா

தவிக்கும் தமிழ்நாடு: டுவிட்டரில் டிரெண்ட்

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (43)
Advertisement
தவிக்கும்தமிழ்நாடு, டுவிட்டர், தமிழகம், தண்ணீர்

சென்னை: தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனை குறிக்கும் வகையில் டுவிட்டரில் உருவாக்கப்பட்ட 'தவிக்கும்தமிழ்நாடு' என்ற ஹேஷ்டாக் இந்தியாவில் டிரெண்டில் உள்ளது.

தமிழகத்தில், பெரும்பாலான மாவட்டங்களில், கடும் வறட்சி காரணமாக, தண்ணீருக்கு மக்கள் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. குடி தண்ணீர் கேட்டு பல இடங்களில் பொது மக்கள் காலி குடங்களுடன் போராட்டம் நடத்துகின்றனர். பல கி.மீ., தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
சென்னையில், அதிக விலை கொடுத்து வாங்க தயாராக இருந்தாலும், உரிய நேரத்தில், தண்ணீர் கிடைக்காத அவல நிலை உள்ளது. பல இடங்களில், தண்ணீருக்காக, வெட்டு, குத்து நடக்க துவங்கி உள்ளது.





இந்நிலையில், சமூக வலைதளமான டுவிட்டரில், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து ' தவிக்கும்தமிழ்நாடு' என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டது. இந்த ஹேஸ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது. ஏராளமானோர், அரசை விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளனர். தண்ணீர் தேடி மக்கள் அலையும் காட்சிகளையும், தண்ணீர் பிடிக்க லாரிகளை மக்கள் முற்றுகையிட்டுள்ள காட்சிகளையும் ,ஏரி, குளங்கள் வறண்ட காட்சிகள், தங்களது பகுதிகளில் நிலவும் தண்ணீர் பிரச்னைகள் குறித்தும் பதிவிட்டு வருகின்றனர்.




Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Coimbatore,இந்தியா
15-ஜூன்-201923:52:05 IST Report Abuse
Rajan தமிழ்நாட்டுக்கு பக்கத்துல உள்ள ஸ்டேட்டுகளுக்கு தண்ணி பிரச்சினை இல்லை .. ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த பிரச்சினை ? இயற்கையை அளிப்பதாலோ ? நீர்வழி தடத்தில் பிளாட் போட்டு வீடு கட்டுவதாலோ? குளத்துக்குள் குடிசை இட்டு கடைசியில் கும்மி அடிப்பதாலோ ? எந்த "தண்ணி" என்று தெரியாமலோ ??
Rate this:
Share this comment
Cancel
15-ஜூன்-201921:05:44 IST Report Abuse
bugindia நம் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய ஒருவர் தொடங்கி விட்டால் , அந்த நிமடமே நம்ம அரசியல் வியாதிகள் அவரை தேசத் துரோகி என்று அறிவித்து கொலை செய்யும் அளவிற்கு போய் விடுகிறார்கள். நம் வாழ்வதாரம் கேள்விக்குறியாகி போய்விட்டது. ☹😢
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
15-ஜூன்-201920:57:27 IST Report Abuse
Krishnamurthy Venkatesan வற்றாத ஜீவா நதிகளிடமிருந்து தண்ணீர் rayil மூலம் மற்றும் கப்பல் மூலம் சென்னைக்கு (தமிழ்நாடுமுழுதும்) கொண்டு வரவேண்டும். மத்திய மாநில அரசுகள் செய்வார்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X