12 கோடி பேர் டிக் டாக் மனநோயாளிகள்: பகீர் தகவல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'12 கோடி பேர் 'டிக் டாக்' மனநோயாளிகள்': பகீர் தகவல்

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (14)
Share

புதுடில்லி: இந்தியாவில், தங்களது நடிப்புத் திறமைகளை காட்டி வீடியோக்களை பதிவிட்டு, 12 கோடிப் பேர் 'லைக்'குகளுக்காக காத்திருப்பதாகவும், தற்கொலை எண்ணத்திலிருப்போருக்கு கவுன்சிலிங்கிற்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.latest tamil news12 கோடி மனநோயாளிகள் :


உலகில் டிக் டாக் செயலியினை ஒரு பில்லியன் அதாவது, 100 கோடிப்பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணிக்கை இந்தியாவில் 30 கோடிப் பேராக இருக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு. சமீபத்தில் டிக் டாக் நிர்வாகம், இந்தியாவில் மட்டும் 12 கோடி பேர் வீடியோக்களை பதிவிட்டுவிட்டு லைக்குகளுக்காக பரிதாபமாக காத்திருப்பதாக தெரிவித்துள்ளது.


150 மொழிகள் :


உலகில், 150 மொழிகளிலும், இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 11 மொழிகளிலும் டிக் டாக் ஆப் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மும்பை மற்றும் புதுடில்லியில் அலுவலகங்களை கொண்டு செயல்படும் டிக் டாக், இந்தியாவில் செயல்படும்'பைட் டான்ஸ்' என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தயாரிப்பாகும்.


500 பணியாளர்கள் :


டிக் டாக்கில் வீடியோக்களை அனுமதிப்பதற்கென்றே இந்நிறுவனம், 500 பணியாளர்களை கொண்டு 24 மணி நேரமும் இயங்கும் அலுவலகங்களை கொண்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் டிக்டாக்கில் 60 லட்சம், ஆபாச மற்றும் வன்முறை தொடர்பான வீடியோக்களை அழித்திருப்பதாக அதிர்ச்சிகரமான தகவலையும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பைட் டான்ஸ் நிறுவனம், டிக்டாக், ஹலோ மற்றும் விவோ என்னும் 3 செயலிகளை நிர்வகித்து வருகிறது. இதில், ஓராண்டிற்குள் மட்டும் டிக்டாக்கில் 24 கோடி வீடியோக்களும், ஹலோவில் 4 கோடி வீடியோக்கள், விவோவில் 3 கோடி வீடியோக்களும் வந்துள்ளதாம்.


latest tamil newsஆபாசம், தற்கொலை :


இந்தப்புள்ளி விபரங்கள், டிக் டாக் செயலிக்கு, ஆபாசம் மற்றும் சுயமோகத்திற்கு, வன்முறை சிந்தனைகளுக்கு பெரும்பாலோர் அடிமைகளாக மாறிவிட்டதையே காட்டுகிறது. பலர், முழுநேர பொழுதுபோக்கு என்ற பெயரில், கலாசார சீரழிவு, குடும்பச் சிதைவிற்கும் உள்ளாகின்றனர். இதில் பொழுதை தொலைத்த பலருக்கும் தற்கொலை சிந்தனைகளும் வந்திருப்பதால், அவர்களுக்கு கவுன்சிலிங் தரவும் டிக் டாக் செயலி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பெல்லே பல்டூசா கூறியுள்ளார்.


13 விதிமுறைகள் :


ஏற்கனவே, டிக் டாக் செயலியினை தடை செய்யவேண்டும் என்று வழக்கு போட்டு, பின்னர் நிபந்தனைகளுடன் செயல்பட நீதிமன்றம் அனுமதித்துள்ளது. எனவே, டிக் டாக் நிறுவனம், இனிமேல் 13 வயதுக்குட்பட்டோரை தடை செய்தல், குறிப்பிட்ட நிமிடங்கள் மட்டுமே பயனர்களை அனுமதித்தல், சாதிவெறி, மதவெறி, ஆபாச வன்முறைகளை துாண்டும் ஏச்சுபேச்சுகளை தடைசெய்தல், தனித்தனி கடவுச்சொற்களை உருவாக்குதல் போன்ற 13 விதிகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறியிருக்கிறது.


தடை செய் :


நவீன தொழில்நுட்பம் என்ற பெயரில், நாகரீகத்தின் வடிவில், பொழுதுபோக்கு சாக்கில் ஆணும், பெண்ணுமாய் சமூகத்தின் ஒருபிரிவினர் இப்படி டிக் டாக் செயலி அடிமைகளாக மாறுவது, கலாசார பண்பாட்டு சீரழிவின் ஒரு பகுதியாகும். அரசு இதில் உரிய முறையில் தலையிட்டு இந்த சமூக, கலாசார சீரழிவை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X