பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் பிரச்னை தீர நடவடிக்கை: ஓ.பி.எஸ்

Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (3)
Advertisement
ஓ.பி.எஸ்., தண்ணீர் பிரச்னை தீர, தேனி

தேனி: தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனியில் தானியங்கி மின்தடை நீக்கும் பதிவு மையத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார். 25 கோடியே 52 ஆயிரத்து 371 ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் மூலம், மின்தடை ஏற்படும் பகுதிகளை கணினி மூலம் தானாகவே அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள மின்தடை குறித்து புகார் அளிக்கவேண்டிய அவசியம் எழாது. இந்த வசதியை துவக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தண்ணீர் பிரச்னையை தீர்க்க மாவட்ட கலெக்டர்களுக்கு உரிய நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளதாக கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
15-ஜூன்-201918:07:33 IST Report Abuse
Apposthalan samlin நதிகளையும் இணைக்க மாட்டார்கள் பெய்த மழை நீரை கடலில் விட்டு புட்டு தண்ணீர் இல்லை என்றால் என்ன அர்த்தம்
Rate this:
Share this comment
Cancel
காவல்காரன்: சுடலை உரிய நிதி வழங்கி உள்ளது. யாருக்கு? ஆட்சி பொறுப்பில் இருந்து இப்படி கூற முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
15-ஜூன்-201915:46:04 IST Report Abuse
Aarkay கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்? கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தியிருந்தால், இந்த நிலை வந்திருக்காது. மூன்று வருடங்கள் தூங்கிவிட்டு, இப்போது இந்த சப்பைக்கட்டு. முடங்கிப் போன இந்த உதவாக்கரை அரசிடமிருந்து நமக்கு விடியல் எப்போதோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X