தண்ணீர் பிரச்னை தீர நடவடிக்கை: ஓ.பி.எஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் பிரச்னை தீர நடவடிக்கை: ஓ.பி.எஸ்

Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (3)
ஓ.பி.எஸ்., தண்ணீர் பிரச்னை தீர, தேனி

தேனி: தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனியில் தானியங்கி மின்தடை நீக்கும் பதிவு மையத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார். 25 கோடியே 52 ஆயிரத்து 371 ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் மூலம், மின்தடை ஏற்படும் பகுதிகளை கணினி மூலம் தானாகவே அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள மின்தடை குறித்து புகார் அளிக்கவேண்டிய அவசியம் எழாது. இந்த வசதியை துவக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தண்ணீர் பிரச்னையை தீர்க்க மாவட்ட கலெக்டர்களுக்கு உரிய நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளதாக கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X