பொது செய்தி

இந்தியா

தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (35)
Advertisement
கர்நாடகா, காவிரி, மேகதாது, அணை

புதுடில்லி: காவிரியின் குறுக்கே அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை எனவும், மத்திய அரசு, தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதி கொடுக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

டில்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதன் பின்னர், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மனு அளித்தார்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடகாவிற்கு முழு அதிகாரம் உள்ளது. புதிய கட்டுமானம் மேற்கொள்ள தமிழகத்தின் அனுமதி வாங்க வேண்டும் என விதிமுறையோ சட்டமோ இல்லை. மேகதாது அணைக்கு தமிழகத்தின் அனுமதி வாங்க வேண்டும் என மத்திய நீர்வள ஆணையம் கூறியுள்ளது. மத்திய அரசு தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.






இதன் பின்னர், மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை, தமிழக முதல்வர் இ.பி.எஸ்.,சும் சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை பற்றி எடுத்துக்கூறிய முதல்வர், கர்நாடக அணை கட்ட அனுமதி கொடுக்கக்கூடாது என வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.





Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
17-ஜூன்-201910:40:26 IST Report Abuse
Jayvee அப்பனுக்கும் பிள்ளைக்கும் பேரனுக்கும் புத்தி பேதலித்து விட்டது .. மோடி அவர்கள் நடுநிலைமையுடன் முடிவெடுக்கவேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
16-ஜூன்-201915:29:34 IST Report Abuse
Ramamoorthy P இப்படியே போனால் கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் உபயோகிக்கும் தண்ணீரின் அளவை கழித்துக்கொண்டு மீதமுள்ள தண்ணீரை விடுகிறேன் என்பார் . இவர் தமிழ் நாட்டில் சாமி கும்பிடுவதற்கு இனி அனுமதி பெற்று தான் வரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
15-ஜூன்-201922:10:22 IST Report Abuse
Ramesh Sargam கர்நாடகாவில் யார் முதலமைச்சர் பதவிக்கு வந்தாலும், ஒன்றை மறந்துவிடுகிறார்கள். அது, நதிகள், இந்திய தேசத்தின் பொது சொத்து என்பதை. மழைக்காலத்தில் அதிக நீர்வரத்து இருந்து அது வெள்ள அபாயமாக மாறினால் அப்பொழுது நாம் கேட்காமலேயே தண்ணீரை திறந்துவிடுவார்கள். வெயில் காலத்தில் குடிப்பதட்க்கும், பயிர்களை காப்பதட்கும் தண்ணீர் கேட்டால் முரண்டுபிடிப்பார்கள், அணை கட்டுவேன் என்று பயமுறுத்துவார்கள். நதிகள் நாட்டின் சொத்து என்று ஒரு மத்திய அரசாணை பிறப்பிக்கப்படவேண்டும். நினைத்த இடத்தில் அணை கட்டுவதை முற்றிலும் சட்டபூர்வமாக தடுக்கவேண்டும். அப்படி மீறி அணை கட்டினால் இடித்து தள்ளவேண்டும். மேலும் ஒன்றனை இந்த கர்நாடக அரசு மறந்துவிடுகிறது. தமிழகத்திற்கு அவர்கள் கொடுக்கும் தண்ணீர், தமிழர்கள் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை. இங்கு நம் தமிழகத்தில் அவர்கள் மாநிலத்தை (கர்நாடகா) சேர்ந்தவர்களும் உள்ளனர், பிற மாநிலத்தவர்களும், பிற நாட்டினரும் உள்ளனர். அவர்களுக்கும் அந்த நதி நீர் பயன்படும் என்பதை ஏனோ அந்த மூர்க்கர்கள் மறந்துவிடுகின்றனர்.
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
16-ஜூன்-201903:34:53 IST Report Abuse
jagan"நாம் கேட்காமலேயே தண்ணீரை திறந்துவிடுவார்கள்." அதை நாங்க போர்க்கால அடிப்படையில் கடலுக்கு அனுப்புவோம் ...ஹா ஹா ஆஹா , புலம்பல் வேறு ஹி ஹி ஹி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X