தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (35)
Share
புதுடில்லி: காவிரியின் குறுக்கே அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை எனவும், மத்திய அரசு, தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதி கொடுக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.டில்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதன் பின்னர், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மனு
கர்நாடகா, காவிரி, மேகதாது, அணை

புதுடில்லி: காவிரியின் குறுக்கே அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை எனவும், மத்திய அரசு, தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதி கொடுக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

டில்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதன் பின்னர், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மனு அளித்தார்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடகாவிற்கு முழு அதிகாரம் உள்ளது. புதிய கட்டுமானம் மேற்கொள்ள தமிழகத்தின் அனுமதி வாங்க வேண்டும் என விதிமுறையோ சட்டமோ இல்லை. மேகதாது அணைக்கு தமிழகத்தின் அனுமதி வாங்க வேண்டும் என மத்திய நீர்வள ஆணையம் கூறியுள்ளது. மத்திய அரசு தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




இதன் பின்னர், மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை, தமிழக முதல்வர் இ.பி.எஸ்.,சும் சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை பற்றி எடுத்துக்கூறிய முதல்வர், கர்நாடக அணை கட்ட அனுமதி கொடுக்கக்கூடாது என வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X