நிடி ஆயோக் : புறக்கணிக்கும் 3 முதல்வர்கள்

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி : நிடி ஆயோக் அமைப்பின் 5 வது கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (ஜூன் 15) மாலை நடக்கிறது. இன்றைய கூட்டத்தில் விவசாய பிரச்னை, வறட்சி, மாவோயிஸ்ட் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பாதுகாப்பு விவகாரம் உள்ளிட்டவைகள் முக்கிய பிரச்னையாக விவாதிக்கப்பட உள்ளது.இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை கவர்னர்கள், மத்திய

புதுடில்லி : நிடி ஆயோக் அமைப்பின் 5 வது கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (ஜூன் 15) மாலை நடக்கிறது. இன்றைய கூட்டத்தில் விவசாய பிரச்னை, வறட்சி, மாவோயிஸ்ட் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பாதுகாப்பு விவகாரம் உள்ளிட்டவைகள் முக்கிய பிரச்னையாக விவாதிக்கப்பட உள்ளது.



latest tamil news




இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். ஆனால் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் ஆகியோர் இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.


நிடி ஆயோக் கூட்டம் : 10 அம்சங்கள்


1. மேற்குவங்கத்தில் பா.ஜ.,வுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் முதல்வர் மம்தா பானர்ஜி, நிடி ஆயோக் எவ்வித அதிகாரமும் இல்லாத அமைப்பு, அது மாநிலங்களுக்கு எந்த வகையிலும் நிதி உதவி செய்ய முடியாது என குற்றம்சாட்டி இருந்தார். இந்த கூட்டத்தில் தான் கலந்து கொள்ள போவதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தார்.


latest tamil news




2. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தெலுங்கானாவில் துவங்கப்பட உள்ள நீர்ப்பாசன திட்டத்திற்கான துவக்க விழா ஏற்பாடுகளை கவனிப்பதில் தான் 'பிஸி' உள்ளதால் தன்னால் நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். இந்த விழாவிற்கு பிரதமர் மோடியை அழைக்க அவர் நேரம் கேட்டிருந்தார். ஆனால் பிரதமர் வெளிநாடு சென்றதால் அவரை சந்திக்க முடியவில்லை.

3. லோக்சபா தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடியை சந்திரசேகர ராவ் இதுவரை சந்திக்கவில்லை. பிரதமரின் பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார்.
4. நிடி ஆயோக் கூட்டத்திற்கு முந்தைய தினமான ஜூன் 14 அன்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ள ஆந்திராவின் புதிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இன்றைய நிடி ஆயோக் கூட்டத்திலும் இது பற்றி விரிவாக பேச உள்ளதாக கூறி உள்ளார்.


latest tamil news



5. பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் இன்றைய கூட்டத்தின் போது தங்கள் மாநிலத்திற்குள் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தலின் போது பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றிருந்த நிதிஷ்குமார், பல ஆண்டுகளாக சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வருகிறார்.
6. ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியும் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன்வைக்க உள்ளது. நடக்க போகும் பார்லி., கூட்டத்தொடரிலும் ஒய்எஸ்ஆர் காங் கட்சியுடன் இணைந்து சிறப்பு அந்தஸ்து கேட்டு போராடவும் பிஜூ ஜனதா தளம் திட்டமிட்டுள்ளது.

7. தனக்கு உடல்நிலை சரியில்லாததால் தன்னால் நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் கூறி உள்ளார். இதனால் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ள காங்., ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.


latest tamil news




8. விவசாயிகள் பிரச்னை, கடன் தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்த கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவரகாங்களை எழுப்ப காங்., ஆளும் மாநிலங்களின் முதல்வர் திட்டமிட்டுள்ளனர்.

9. தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை, காவிரி விவகாரம் குறித்து தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

10. தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி உள்ளிட்டோரையும் தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூன்-201904:42:54 IST Report Abuse
Krishnamurthy Venkata Rathinam நிடி அல்ல நிதி.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-ஜூன்-201904:31:17 IST Report Abuse
J.V. Iyer கேரளா முதல்வர் பினனாயி கூட போகமாட்டார் என்று நினைத்தேன். கேரளா, மேற்குவங்கம் இரு மாகாணங்களும் பாகிஸ்தானின் அங்கமாக செயல் படுகின்றன. இருக்கும் எதிர்க்கட்சிகள் ஆட்சிசெய்யும் மாநிலங்களில் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் ஒருவர் தான் நல்ல முறையில் ஆட்சி செய்கிறார். அவருக்கு தான் எல்லோரிடமும் மதிப்பு.
Rate this:
Cancel
Parthasarathy Ravindran - Chennai,இந்தியா
15-ஜூன்-201920:15:05 IST Report Abuse
Parthasarathy Ravindran பெயில்இல் இருப்பவருக்கு என்ன பேச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X