பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் வெப்பம் 4 டிகிரி உயரும்

Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (4)
Advertisement
தமிழகம், வெப்பம், மழை, வானிலை மையம்

சென்னை : வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அம்மையம் கூறுகையில், ''சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கரூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களிலும் புதுவையிலும் அடுத்த 2 நாட்களுக்கு வழக்கத்தை விட 2முதல் 4டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும்.

தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலை சார்ந்த பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்சமாக 41டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

தென் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 3சென்டிமீட்டர் மழையும், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தலா 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது,'' என்று தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rm -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூன்-201919:42:10 IST Report Abuse
rm plant trees!
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-ஜூன்-201915:28:53 IST Report Abuse
இந்தியன் kumar சூரிய பகவானை வணங்குவோம்,வெம்மையை குறைப்பார்
Rate this:
Share this comment
Man - ,
15-ஜூன்-201920:45:24 IST Report Abuse
ManOnly solution Pray to creator not his creations...
Rate this:
Share this comment
Cancel
15-ஜூன்-201915:06:53 IST Report Abuse
Henry Trichy பள்ளி செல்லும் பிள்ளைகள் கடும் கோடை வெயிலால் பாதிக்கப் படுகின்றனர். AC யில் இருக்கும் கல்வி அதிகாரிகளுக்கு சுய முடிவு எடுக்கும் அளவிற்கு துணிவும் இல்லை..பாவம் பள்ளி பிள்ளைகள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X