பாட்டி வழியில் பிரியங்கா

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (30)
Advertisement

புதுடில்லி : காங்., கட்சி தலைவரான ராகுல் செய்யாவிட்டாலும், அவரது சகோதரியும், கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கட்சி தொண்டர்களை சந்தித்து பேசி வருகிறார்.

டில்லியில் உள்ள ராகுலின் வீட்டில், கட்சி தொண்டர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் பிரியங்கா. கள நிலவரத்தை தெரிந்து கொள்ளவதற்காக "ஜன் தர்பார்" என்ற பெயரில் முன்னாள் பிரதமர் இந்திரா இதே முறையை தான் பின்பற்றி வந்தார்.
புதிய லோக்சபா கூட்டம் துவங்கும் ஜூன் 17 வரை ராகுல் வெளிநாடு சென்றுள்ளார். ராகுல் இல்லாததை காரணம் காட்டி தொண்டர்களை சந்திப்பதை ஒதுக்கி வைக்க கூடாது என்பதில் பிடிவாதமாக உள்ளார் பிரியங்கா.
மே 25 ம் தேதி நடந்த காங்., செயற்குழு கூட்டத்தில், கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் கூறிய பிறகு முதல் முறையாக காங்., கட்சி சுற்றறிக்கை ஒன்றை ஜூன் 14 அன்று அனுப்பி உள்ளது. அதில், மகாராஷ்டிரா காங்., கட்சி தலைவராக பாலாசாகிப் தோராட்டை நியமிக்க காங்., கட்சி ஒப்புதல் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையில் காங்., பொதுச் செயலாளராக உள்ள கே.சி.வேணுகோபால் தான் கையெழுத்திட்டிருந்தார். கட்சி தலைவரான ராகுல் கையெழுத்திடவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-ஜூன்-201907:36:33 IST Report Abuse
Nallavan Nallavan கட்சியினரைத் திட்டிவிட்டு அவர்களை அழைத்து என்ன பேசுவார் ?? முதல்ல அமைதியா கூல் பண்ணிட்டு அப்புறம் பேசுவாரா ??
Rate this:
Share this comment
Cancel
LoveDemocracy - Houston,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-201905:18:59 IST Report Abuse
LoveDemocracy இந்திய அரசியல் உருப்படணும்னா, குடும்ப/வம்சாவளி அரசியல் ஒழிய வேண்டும். நம்ம நாட்டில் வேறு நன்கு படித்த திறமைசாலி இல்லையா என்ன? தமிழ் நாட்டு தண்ணீர் பிரச்னையை கூட தீர்க்க முடியாத கட்சி தலைவர்களெல்லாம் தொண்டர்களாகக்கூட தகுதியற்றவர்கள். We need more talented and serving minded people to rule, not money minded selfish family members.
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
15-ஜூன்-201921:57:46 IST Report Abuse
Aarkay பாட்டி போலவே இருக்கிறார் ஆனால், யார் என்ன தூக்கினாலும், காங்கிரஸ் கட்சி என்னவோ பூட்ட கேஸ் தான்
Rate this:
Share this comment
Aarkay - Pondy,இந்தியா
16-ஜூன்-201900:51:38 IST Report Abuse
Aarkayஇந்த படத்தை பார்த்ததும் எனக்கு என் பாட்டி ஞாபகம் வந்துவிட்டது...
Rate this:
Share this comment
Aarkay - Pondy,இந்தியா
16-ஜூன்-201900:53:43 IST Report Abuse
Aarkayகூனி, அருகில் மந்திரை சேர்ந்து இருப்பது போலுள்ளது இந்த படம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X