உத்தவ் தாக்கரே அயோத்தி பயணம்; உளவுத்துறை அலர்ட்

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement

மும்பை: மகாராஷ்டிராவில் வெற்றிபெற்ற புதிய எம்.பி.,க்களுடன் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நாளை (ஜூன் 15 ) அயோத்தியில் ராமஜென்மபூமி இடத்தை பார்வையிட செல்கிறார்.






18 எம்.பி.,க்கள் :


பா.ஜ.,தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் அபார வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களில் வென்றது. கூட்டணி கட்சியான சிவசேனா 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற சிவசேனா கட்சியின் 18 எம்.பி.க்களுடன் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நாளை அயோத்திக்கு செல்கிறார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.





பா.ஜ.,வரவேற்பு :


அயோத்தியில் ராமஜென்மபூமியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தலில் வைத்துள்ள ராமர் சிலையை வழிபட உள்ளார் என கட்சியினர் தெரிவித்துள்ளனர். உத்தவ் தாக்கரே மற்றும் அவருடன் வரும் எம்.பி.க்களுக்கு வரவேற்பு அளிக்கப்படும் என உ.பி.,மாநில பா.ஜ., மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல உ.பி. துணை முதல்வர் கேசவ் மவுரியாவும் வழிபடுகிறார், மேலும் ராமஜென்ம பூமி தலைவர் மஹாந்த் நிருத்திய கோபால்தாசின் 81-வது பிறந்த நாள் விழாவும் அயோத்தியில் கொண்டாட விசுவ இந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது.


பயங்கரவாத அபாயம் :


இந்த நிலையில் அயோத்தியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது. அயோத்தியில் பஸ்கள், ரெயில்கள், மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளது.

நேபாளத்தில் இருந்து உத்தர பிரதேசத்தில் ஊடுருவி அயோத்தியில் உள்ள அம்பேத்கர் நகர், பைசாபாத், கோரப்பூர் ஆகிய நகரங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது. உளவுதுறை எச்சரிக்கையை தொடர்ந்து அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pandi - Katumandu,நேபாளம்
15-ஜூன்-201922:44:09 IST Report Abuse
Pandi இவர் எதற்கு இப்பொது பயணம் தேவையா. இனி கூட்டணி அமைத்து பதவி கிடைத்துவிட்டது. இனி மோடி அரசை கலைப்பார்கள். இவர்களின் தந்திரம் நாம் அறிவோம்.
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
15-ஜூன்-201917:30:40 IST Report Abuse
vasanthan மும்பை நகரத்தை கயவர்களீடம் இருந்து காத்து வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். ராமராஜ்யம் அமைய போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X