மம்தாவிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement

புதுடில்லி : மேற்கு வங்கத்தில் நடந்து வரும் அரசியல் வன்முறைகள் மற்றும் கடந்த 6 நாட்களாக தொடரும் டாக்டர்கள் ஸ்டிரைக் குறித்து, மத்திய அரசு மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையிலான மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.



latest tamil news



தாக்குதல் :


மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை கொடூரமாக தாக்கினர்.


latest tamil news



டாக்டர்கள் ஸ்டிரைக் :


இதை கண்டித்து கடந்த 12-ம் தேதி முதல் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வர் மம்தா பானர்ஜி, அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். மம்தாவின் இந்த நடவடிக்கை போராட்டக்காரர்களுக்கு ஆத்திரத்தை கொடுத்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 700-க்கும் மேற்பட்ட மூத்த டாக்டர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்தனர்.


6 கோரிக்கைகள் :


மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு, தங்களது 6 கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என டாக்டர்கள் அறிவித்து உள்ளனர். இதேபோல் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் இடையே மோதல்கள் வலுத்து வருகிறது. இதன் எதிரொலியாக பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாஜக பெண் பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேற்கு வங்காளத்தில் கடந்த 4 ஆண்டுகளில் அரசியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதில் கடந்த 4 ஆண்டுகளில் 160 அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


latest tamil news



உள்துறை கடிதம் :


இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் தொடர்ந்துவரும் அரசியல் வன்முறை மற்றும் டாக்டர்கள் ஸ்டிரைக் குறித்து தனித்தனியே விளக்கம் அளிக்குமாறு அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (ஜூன் 15)கடிதம் அனுப்பியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
16-ஜூன்-201908:00:21 IST Report Abuse
blocked user பிரதமர் பதவி கையைவிட்டுப்போனதில் மமதா மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். அதன் பின்னணியில் இது போன்ற எந்த விஷயத்தையும் கையாளும் மன நிலையில் இல்லை. முதல்வர் பதவி தரும் தெம்பு சிந்திக்கும் திறனை முழுவதும் இழக்க வைத்து இருக்கிறது. முதல்வர் பதவி போனால் ஒருவேளை இது மாறலாம்.
Rate this:
Cancel
Varipuli - VaigaiCity,இந்தியா
16-ஜூன்-201907:32:24 IST Report Abuse
Varipuli விளக்கம் கேட்க தேவையில்லை , இந்த பார்த்தீனிய செடியை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் , இந்த பொன்பலே அரக்கியால் நாட்டிற்கு தேவையில்லாத பிரச்சனை தான்.
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
16-ஜூன்-201907:30:38 IST Report Abuse
Nallavan Nallavan இது போன்ற சந்தர்ப்பங்களில் மாநில அரசிடம் விளக்ககம் கேட்பது மத்திய உள்துறையின் கடமை ...... அதிகாரத் திமிரோ, உரிமை மீறலோ இல்லை .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X